பிரட் சீஸ் புட்லா செய்வது எப்படி?
பிரட் சீஸ் புட்லா செய்வது எப்படி? பிரட் சீஸ் புட்லா என்ற பெயரைக் கேட்டதும் இது ஒரு வட இந்திய உணவு வகையாகத்தான் இருக்கும் என்பது புரிந்திருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரட் மேல் ஜாம் தடவி அப்படியே டப்பாவில் அடைத்துக் கொடுத்து அனுப்புவோம். வீட்டில் இருக்கும் நேரத்தில் பிரட் ஆம்லெட் அல்லது பிரட் புரூஜி இதுதான் பெரும்பாலான நேரங்களில் நமது தயாரிப்பாக இருக்கும். ஆனால் பிரட் வைத்து வகைவகையான பண்டங்கள் தயாரிக்கலாம். அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்று உண்டென்றால் அது பிரட் சீஸ் புட்லா. மும்பை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் இந்தப் பிரட் பீஸ் புட்லா மணமே அட்டகாசமாக இருக்கும். ஜவேரி பஜார் போன்ற பெரிய மார்க்கெட் பக்கம் போனால் முதலாவது நம்மைச் சுண்டி இழுப்பது பிரட் புட்லா வாசனை தாங்க. அந்தக் கடையைத் தாண்டி செல்லவே கால் தடுமாறும். அப்படி ஒரு ஈர்ப்பு பிரட் சீஸ் புட்லாவுக்கு உண்டு. ஒருமுறை சாப்பிட்டு ருசி கண்டுவிட்டால் மறுபடியும் மறுபடியும் அந்தப்பக்கம் போய் பிரட் சீஸ் புட்லா சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிடும். பட்டரும் மல்லித்தழையும் கலந்த ஒருவித மணமும் மொறுமொறுவென்ற அதன் சுவையும் நம்...