ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்....
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்.... ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு " குறள் : 190 ஏதிலார் - மற்றவர் குற்றம் - பிழை போல் - போன்று தம் - தமது குற்றம் - பிழை காண்கிற்பின் - காண்பார்களானால் தீது - தீமை உண்டோ - உளதோ மன்னும் - நிலைபெறுகின்ற உயிர்க்கு - உயிர்களுக்கு அயலாருடைய குற்றங்களைக் காண்பதுபோல் தம் குற்றங்களையும் காணும் பண்பு கொண்டவராக ஒருவர் இருப்பாரானால் அவரால் வாழும் உயிர்க்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை. விளக்கம் : எப்போதுமே நமக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் செய்வதுதான் சரி என்று மனதுக்குள் ஒரு தீர்ப்பு எழுதி வைத்துக் கொள்வோம். நம்மிலும் குற்றம் குறைகள் இருக்கலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு. அதனை ஒத்துக்கொள்ளும் மன பக்குவம் யாருக்குமே கிடையாது. அடுத்தவர்கள் செய்கிற எல்லா செயல்களிலும் குற்றம் கண்டுபிடிப்போம். கண்ணுக்குள் விளக்கெண்ணெய்யை ஊன்றிக்கொண்டு பார்ப்போம். உடுக்கும் உடையில் ...பேசும் பேச்சி...