Posts

Showing posts with the label தமிழ் இலக்கணம்

வல்லினம் மிகும் இடங்கள்

                    வல்லினம் மிகும் இடங்கள் சிலர் பேசும்போது அழகாக பேசுவதுபோல் இருக்கும். எழுதும்போது அங்கங்கே பிழை இருக்கும். இதற்குக் காரணம் என்ன? இரண்டு சொற்கள் சேரும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் வல்லினம் மிகும் எந்தெந்த  இடங்களில் எல்லாம் வல்லினம் மிகாது என்பதைப் பற்றிய போதிய பயிற்சி இல்லாமையே  ஆகும். இந்தக் கட்டுரையில் எந்தெந்த  இடங்களில் எல்லாம் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் சேரும்போது முதலில் எழுதப்படும் சொல்லை நிலைமொழி என்போம். இரண்டாவது அதனோடு இணையும் சொல் வருமொழி எனப்படும். எடுத்துக்காட்டாக அந்த வீடு என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அந்த என்பது நிலைமொழி. வீடு என்பது வருமொழி. இந்த இரண்டு சொற்களையும் எழுதும் போது  , அந்த+ வீடு = அந்த வீடு என்று எழுதுகிறோம். ஆனால் , அந்த + பள்ளி  = அந்தப் பள்ளி என்று எழுதுகிறோம். அந்த வீடு என்று எழுதும்போது அந்தவ் வீடு என்று எழுதுவதில்லை. அந்தப் பள்ளி என்று எழுதும்போது ஒற்று மிகுந்து வந்துள்ளது. காரணம் என்ன? வருமொழி முதலில் வல்லினம் வந்தால் மட்டுமே ஒ...