மகராசி
மகராசி மகராசி பெயருக்கு ஏற்றபடி முகராசியானப் பொண்ணு. பார்க்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிற அழகு. படிப்பிலும் கெட்டிக்காரி என்று பெயர் எடுத்திருந்தாள். எட்டாம் வகுப்பு படித்த மகராசி ஒருநாள் பள்ளியைவிட்டு நின்றுவிட்டாள். ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வராததால் ஒரு பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி விசாரித்து வரச் சொன்னார் தலைமை ஆசிரியர். மகராசி வீட்டுக்குச் சென்று வந்த அந்த மாணவி் வெட்கத்தோடு தலைமையாசிரியர் முன்னால் வந்து நின்றாள். ...