Posts

Showing posts with the label விடுதலைக்கவி பாரதி -கட்டுரை

விடுதலைக்கவி பாரதி

விடுதலைக்கவி பாரதி முன்னுரை: பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை உச்சரிக்கும்போதே நம்முள்  உணர்ச்சிப் பொங்கும். உத்வேகம் எடுக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டியவர் தனது சிந்தனைகள் மூலமாக மக்களைத்  தட்டி எழுப்பியவர்.தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத் துயிலெழ வைத்தவர். இந்திய விடுதலைப்  போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாத சக்தி பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது.   விடுதலை வீரர்: தென் தமிழகத்தின் எட்டையபுரம் என்ற ஊரை உலகமெங்கும் எட்டிப் பார்க்க வைத்த பெருமை பாரதிக்கு  உண்டு. பாரதி வெறும் இலக்கியப் புலவர் மட்டும் அல்லர். விடுதலையை வேள்வியாகச் செய்து கொண்டிருந்த விடுதலைப்போர் வீரர் என்றுதான் அவரை அடையாளம் காண முடியும். விடுதலை வேட்கை: விடுதலை வேட்கை வெறிகொண்ட ஒப்பற்ற கவிஞர் பாரதி.அவருக்கு தாய்மொழி மீதும் தாய் நாட்டின் மீதும் தணியாக் காதல் உண்டு. இதனை பாரதியின் பாடல் வரிகள் பறைசாற்றி க் கொண்டேயிருக்கும். " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்  என்று மடியும் இந்த அடிமையின் மோகம்  என்ற...