சத்தியவான்
சத்தியவான் "அப்பா இருக்காரா" வாசலில் நின்று உரக்கக் கத்தினார் பெரிய வீட்டுக்கார சிதம்பரம். பதில் சொல்லாமலேயே "வாங்க" என்றார் அம்மா. "நான் உட்கார வரல...உங்க வீட்டுக்காரர் வந்துட்டாரான்னு பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன்" என்று கறாராகப் பேசினார் . "அவுங்க வந்ததும் உங்களை வந்து பார்க்க சொல்லுறேன் " "இதைத்தான் எத்தனை நாளா சொல்லுகிட்டு இருப்பீங்க... எங்க போயி ஒளிஞ்சுகிட்டாரு உங்க வீட்டுக்காரரு. ஊருக்காரன் விளைச்சலை எல்லாம் மூட்டை மூட்டையா அள்ளி லாரியில் அனுப்பத் தெரியுது...அதுக்குப் பணம் கொடுக்கணும்ன்னா வலிக்குதோ...." "என்ன நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க... நாங்க அப்படிப்பட்ட ஆளுங்க கிடையாது." "எப்படிப்பட்ட ஆளுன்னுதான் ஊருக்கெல்லாம் தெரிஞ்சு போச்ச....இன்னும் எத்தனை நாளுக்குதான் பம்மாத்து காட்டுறாருன்னு பார்க்கத்தானே போறோம்" "கமிஷன் கடையில் கொடுத்ததும் கொண்டு வந்து தந்துருவாங்க..." "கமிஷன் கடையில்தான் ஒண்ணு இல்லாம வாங்கி கட்சி காரனுக்குக் கொடுத்துட்டாராமே... இனி கமிஷன் கடைக்காரர் ஒரு ரூப...