சங்கத்தமிழ் மூன்றும் தா
சங்கத்தமிழ் மூன்றும் தா எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் இறைவனைத் தொழுவது நமது வழக்கம். இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நாம் செய்யப் போகும் காரியம் வாய்க்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருக்கும். ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்காக என்ன? நாம்,நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும். படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். நோய்நொடி இல்லாத நலமான வாழ்வைத் தர வேண்டும் என்று இறைவனிடம் கேட்போம். நல்ல அறிவைக் கொடு என்று கேட்போம். கீர்த்தியும் புகழும் வந்து சேரட்டும் என்று கேட்போம். ஔவையும் தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக இறைவனை வணங்கினார். வணங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார். அப்படி என்ன தேவை ஔவைக்கு இருந்தது.? வயிறார உண்ண நல்ல உணவு வேண்டும் என்று கேட்டாரா? எழுதி முடிக்கும் வரை போதிய உடல் நலம் வேண்டும் என்று கேட்டாரா? வேறென்ன கேட்டிருப்பார்? நீங்கள் நினைப்பதுபோல் இப்படியொரு வேண்டுதலை ஔவை முன் வைக்கவில்லை. அவர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? இதோ கேளுங்கள்... எனக...