Posts

Showing posts with the label நதி எங்கே போகும்-சிறுகதை

நதி எங்கே போகும்

நதி எங்கே போகும்  தாத்தா கையைப் பிடித்தபடி துள்ளித் துள்ளி நடந்து வந்தாள் மீனா. "என்ன...தாத்தாவும் பேத்தியும் காலையிலேயே  புறப்பட்டுடீங்க." கேட்டார் மதியழகன். "ஓடைக்கரைக்குப் போகணும் என்று ஒரே பிடிவாதம். அதுதான் கூட்டிட்டு போய் காட்டணும் என்று போறேன்." என்றார் வேதமுத்து தாத்தா. "அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கு...? சீமைகருவேல மரமும் நாலு வேப்பம்மரமும் நிற்கு... உங்க பட்டணத்தை மாதிரி இங்கே கட்டடம் ஒண்ணும் கிடையாது " என்றார் மதியழகன். "சரி பட்டணத்துல இருக்கிற புள்ள. பார்க்க ஆசைப்படுது. கூட்டிட்டுப் போறேன்." என்றபடி பேத்தியின் கையை இறுக்கமாகப் பற்றியபடி நடந்தார்  வேதமுத்து. "தாத்தாவும் பேத்தியும் நல்லா பார்த்துட்டு வாங்க..." தாத்தா பேசிக் கொண்டிருக்கும்போதே கையைப் பிடித்து இழுத்தாள் மீனா. சரி. வாறேன்  என்று கையைப் பிடித்தபடி இருவரும் நடந்தனர். "தாத்தா இந்த பாதை எங்கப் போவுது ?" "நம்ம தோட்டத்துக்குத்தான்." "அப்போ  முன்னால ஒரு பாட்டி போறாங்க அவங்களும் நம்ம தோட்டத்துக்குதான் போறாங்களா ? " "இல்லை...அவங்க காட்ட...