Posts

Showing posts with the label முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்?....குறுந்தொகை விளக்கம்

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்?

Image
  முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? காத்திருப்பதை மாதிரி கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. காத்திருக்கும் போது ஒவ்வொரு வினாடி  கழிவதும் ஒரு யுகம் கழிவது போல இருக்கும். சாதாரணமாக ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். ஒரு அரைமணி நேரம் பேருந்து வரவில்லையென்றால் போதும். ஒரு மாதிரியாக அங்குமிங்கும் நெளிய ஆரம்பித்துவிடுவோம். கூடவே இந்தப் பாழாய்ப் போன பேருந்து எங்கே போய் தொலைந்தது என்று பேருந்தை அர்ச்சனை செய்யத் தொடங்கி விடுவோம். மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் இருப்போம். ஆனால் எதிர்பார்ப்போடு யாரோ  ஒருவருக்காகக் காத்திருக்கும்போதுதான் காத்திருப்பது மாதிரி கொடுமை வேறு எதுவும் இல்லை என்பதை உணருவோம். அதுவும் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் போது அது நடைபெறாமல் போய்விடுமோ ? ஏமாந்து போய்விடுவோமோ ?என்ற நினைப்பு வந்து எட்டிப்பார்த்து நம்மைப் புலம்ப வைக்கும்.உடலெல்லாம் வியர்க்கும். நாலு மணிக்கு வருகிறேன் என்று சொல்லிச்சென்ற கணவர் நாலரை வரை  வரவில்லை என்றால் ஒருமாதிரி அலைமோதுவோமே அந்த அலைமோதல் புலம்பல் எல்லாம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். அந்த வலி...