எது நம்பிக்கை துரோகம்
எது நம்பிக்கை துரோகம்? " விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்" என்பார் வள்ளுவர். ஒருவர் உன்மீது எந்தவித ஐயப்பாடுமின்றி நம்பிக்கை வைத்திருக்கிறார். .அப்படிப்பட்டவர்க்கு ஒரு தீமை செய்பவர் இறந்தவரினும் வேறு அல்லர். அவர் இருந்தும் இல்லாமல் இருப்பவருக்கு ஒப்பினவராகவே கருதப்படுவார். இதுதாங்க நம்பிக்கைத் துரோகம். நம்மை நம்பி இருப்பவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்தல் கூடாது. துரோகங்களில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம் தாங்க. துரோகமே கடுமையான மன உளைச்சல் தரக்கூடியதுதான். இதில் பெரிய துரோகம் ஒன்று என்றால்... தாங்க முடியாமல் மனவலிமையை ஏற்படுத்தும். காலத்துக்கும் வலிக்கும். நினைத்த உடனே கண்ணீர் வழியும். பேச வாய் எழாது. சொல்லும்போது அப்படியா?... என்று சாதாரணமாக கேட்டுவிட்டு கடந்து போகலாம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும். துரோகம் நண்பர்கள் இழைத்துவிட்டால்... நாலுநாள் வலிக்கும். துடைத்துப் போட்டுவிட்டு கடந்து போய்விடலாம். பணியிடங்களில் துரோகிகள் இருக்கலாம்.எத்தனை மணிநேரம் அவர்களோடு இருக்கப்போகிறோம்? கண்டும் காணாமலும் கடந்து போய...