Posts

Showing posts from August, 2020

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி....

      நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி... " நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள  பாடறிவார்  மாட்டு   "                                  குறள்  :  995 நகை_ சிரிப்பு , மகிழ்ச்சி, விளையாட்டு இன்னா _ துன்பம் தரும் இகழ்ச்சி _ இகழ்ந்து பேசுதல், அவமதித்தல் பகையுள்ளும் _ பகைவரிடத்தும் பண்புள _ நற்பண்பு உள்ளவர்  பாடு _ வருத்தம் , அனுபவம் ,உலக ஒழுக்கம்  அறிவார்  _   உணர்தல் , நினைத்தல் மாட்டு  ,_ அவ்வாறு செய்யார் விளையாட்டுக்காக  ஒருவனை இகழ்வாகப் பேசினாலும் அது அவனுக்கு மன வருத்தத்தைக் கொடுக்கும். ஆதலால் நல்ல பண்புடைய மக்கள் பகைவரைக்கூட ஒருபோதும் இகழ்வாக பேச மாட்டார்கள். விளக்கம் : ஒருவனை இகழ்ச்சியாக  பேசினால் அதனை அவன் தனது தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக் கொள்வான். ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வா...

விடாமுயற்சி

Image
                              விடாமுயற்சி " முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். " முயற்சி செய்து உழைத்துக் கொண்டே   இருந்தால்  செல்வம் பெருகும்.   முயற்சி ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் வறுமை வாசலில் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். வெற்றி சாதாரணமாக யாருக்கும் கிடைத்து  விடுவதில்லை. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். வெற்றிக்காக நாம் பல படிகளைக் கடந்துவர வேண்டியிருக்கும். அதில் ஏறி மேலே வரும்முன் ஐயோ! அம்மா!  ...மூச்சு வாங்கும். அதற்காக பயணத்தை இடையில் விட்டுவிடக் கூடாது. வெற்றிக்காக நாம் வகுத்து வைத்துள்ள தவறுதலான பாடத்திட்டம் நம்மை பலமுறை சறுக்கி விழச் செய்யும். எங்கே சறுக்கல் இருந்தது என ஆய்ந்து அதைக் களைந்துவிட்டால் பயணம் ஓரளவு சுமுகமாக இருக்கும்.   முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தொடங்கும்போது இதனை நம்மால் செய்துவிட முடியுமா என்று மலைப்பாகத்தான் இருக்கும். இதெல்லா...

போராட்டம்

Image
                                      போராட்டம் காலையில் இருந்தே ஊர் களை கட்ட ஆரம்பித்தது. "அண்ணே நீங்க வாரீங்க ... தம்பி நீயும் வாயேன் " என்று ஆளாளாளுக்கு எங்கேயோ சிற்றுலா செல்ல  ஆள் திரட்டுவதுபோல யாரையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். "மாமா நீங்க வாறீங்களா ?"என்றான் முத்துசாமி. "என்ன தம்பி அப்படி கேட்டுபுட்ட நான் இல்லாமலா...அப்போ எத்தனை  மணிக்குப் போகணும்" என்றார் பெரிய வீட்டுப் பிரகாசம். "ஒன்பது மணிக்குப் போகணுமாம்.  தலைவர் ஐயா சொல்லி இருக்காங்க..." "நேரம் இருக்குல்ல...ஒரு எட்டு போயி வயலை பார்த்து  வாரேன்." சொல்லியபடி வயலை நோக்கிச் சென்றார் பிரகாசம். "சுருக்கா வந்துடுங்க தாத்தா... பிறகு எல்லாரும் உங்களை விட்டுட்டுப் போயிடுவாங்க..." தாத்தாவை விட்டுவிட்டு எல்லோரும் போயிடக் கூடாதே என்ற அக்கறையில் பேசினான் பேரன் பாலன் . பிரகாசத்தின் இளைய மகன்  கந்தசாமி கல்லூரிக்குப் போகும் வாலிபன். அவன்  போராட்டத்தைப் பற்றிக் கேட்டதில் இருந...

கொக்கொக்க கூம்பும் பருவத்து.....

Image
கொக்கொக்க கூம்பும் பருவத்து..... " கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து "                     குறள்  :  490 கொக்கு _ மீனை விரும்பி உண்ணும் ஒரு பறவை ஒக்க _ ஒத்திருக்க, போன்று கூம்பும்  _ ஒடுங்கியிருத்தல் , காத்திருத்தல் பருவத்து _ ஏற்ற காலம்வரை மற்று _ அவ்வாறின்றி , ஆனால் அதன் _ அதனுடைய  குத்து _ கொத்துதல் , ஒக்க _ ஒத்திருக்க, போன்று சீர்த்த இடத்து _ ஏற்ற காலத்தில்,                            வாய்ப்பான நேரத்தில்   வாய்ப்பு சரியாக அமையும்வரை கொக்கு காத்திருப்பதுபோல காத்திருக்க வேண்டும். சரியான காலம் வாய்த்ததும்  மீனைக் கண்டவிடத்து  தனது குறி தப்பாமல் கொத்திச் செல்லும்  கொக்கு போல செய்யும் செயலைத்  தவறவிடாது செய்து முடிக்க வேண்டும். கொக்கானது நீர்நிலைகளுக்கு அருகில் வெகுநேரம் ஒற்றைக் காலில் தவம் இருக்கும். நீர் நிலைகளில் மீன்கள் துள்ளி விளையாடுவதை  கண்டு கொள்ளாததுபோல அமைதியாக நிற்கும். ஆனால் சரியாக ...

தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை

Image
      தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை தமிழ் அரிச்சுவடி படிக்காமல் தமிழ்   எழுத்துகளைத் தெரிந்து கொள்ள முடியாது.  இது  தமிழ் அகர வரிசை, தமிழ் நெடுங்கணக்கு   என்ற பெயர்களாலும்  அழைக்கப்படும்.   தமிழ் எழுத்துகள் எத்தனை என்ற   கேள்விக்கு  247 என்று நம்மில் பலருக்குத்   தெரியும். காரணம் தமிழராக இருந்து கொண்டு தமிழ் எழுத்துகள் எத்தனை  என்பதுகூட தெரியவில்லையே என்று யாராவது சொல்லிவிட்டால்... அப்படி ஒரு அச்சம் எப்போதும் மனதில் இருக்கும். எப்படி என்று கேட்டால்  முழுவதையும் சரியாகச் சொல்லத் தெரியாது. கூட்டிக் கழித்து சொல்லிப் பார்ப்போம். அங்கங்கே இடிக்கும். கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போம்.                   உயிர் எழுத்துகள்           =    12                   மெய்யெழுத்துக...

தொட்டனைத் தூறும் மணற்கேணி....

Image
    தொட்டனைத்தூறும் மணற்கேணி.... "    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்    கற்றனைத் தூறும் அறிவு "                                               குறள்   :  396      தொட்டனைத்து  _   தோண்டிய அளவுக்கு      ஊறும்   _  சுரக்கும்      மணற்கேணி   _ ஊற்று      மாந்தர்க்கு  _  மக்களுக்கு      கற்றனைத்து  _  கற்ற அளவுக்கு      ஊறும்   _  பெருகும்         மணற்கேணியில்  தோண்ட தோண்ட  நீர் சுரப்பது பெருகிக் கொண்டே இருக்கும். அதுபோல நாம் கற்கும் கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். விளக்கம் :         மணல் ஓடைகளில் எவ்வளவு ஆழம்  தோண்டுகிறோமோ அதற்கு ஏற்ப  நீரின் அளவு கூடிக் கொண்டே இருக்கும். ...

யான்நோக்குங் காலை நிலன் நோக்கும்....

யான் நோக்குங் காலைநிலன் நோக்கும்.... யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்  "                          குறள்  : 1094                                                     யான்  _  நான்  நோக்குங்காலை  _  பார்க்கும் பொழுது  நிலன் நோக்கும் _ நிலத்தைப் பார்க்கும் நோக்காக்கால்  _  பார்க்காதபோது தான்  நோக்கி _ தலைவனைப் பார்த்து மெல்ல நகும் _  மெதுவாக புன்னகைக்கும் நான் பார்க்கும்போது பாராததுபோல நிலத்தைப் பார்ப்பாள்.நான் பார்க்காதபோது மெதுவாக  என்னைப் பார்த்து புன்முறுவல் கொள்வாள். விளக்கம் : தலைவன் பார்க்கும்போது தலைவி  பார்க்க மாட்டாளாம்.பார்க்காததுபோல வெட்கத்தால் நிலத்தைப் பார்த்துக்  கொண்டிருப்பாளாம். தலைவன் அந்தப் பக்கம் திரும்பியதுதான்  தாமதம் தலைவனைப் பார்த்து மெதுவாக தனக்குள்ளே புன்ன...

சொல்லுக சொல்லிற் பயனுடைய...

Image
      சொல்லுக சொல்லிற் பயனுடைய....     " சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க     சொல்லிற் பயனிலாச் சொல் "                                          குறள் :  200 சொல்லுக  _ பேசுக சொல்லிற்  _ சொல்ல வேண்டுமிடத்து பயனுடைய  _ பயனை விளைவிக்கக் கூடிய சொல்லற்க _ சொல்லக் கூடாது சொல்லிற்  _ சொற்களில் பயனிலா  _  நன்மை தராத , பொருளற்ற சொல் _ பேச்சு ,  மொழி   சொல்லும் சொற்கள் பிறருக்கு பயன்தரும்  விதத்தில் சொல்லுதல் வேண்டும்.  எந்தவிதத்திலும் பயன்தராத   சொற்களை ஒருபோதும்    பேசுதல் கூடாது. விளக்கம் : சொல்லுக என்று சொல்லுவதனால்  பேச வேண்டும் . பேசாதிருத்தல் கூடாது. அப்படிப் பேசும்போது  பயனுள்ள சொற்களை  மட்டுமே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள். முடிவில் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. கேட்டவருக்கு  எ...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.....

Image
      உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்......     " உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது     தள்ளினுந் தள்ளாமை நீர்த்து "                                    குறள். :        596   உள்ளுவது _  நினைப்பது    எல்லாம்.  _  யாவும்   உயர்வுள்ளல்  _ உயர்வாகவே நினைக்க   தள்ளினும்  _  கைகூடாவிடினும்    தள்ளாமை _ கைவிட்டுவிடக் கூடாது   நீர்த்து.  _ நீர்த்துப் போக விடாமல்,செயல்படுத்தாமல்ட     நாம் நினைப்பன எல்லாம் உயர்வானதாகவே இருக்கட்டும்.  நாம் நினைத்த உயர்வு கிட்டாமலேயே போனாலும் அதைக்  கைவிட்டுவிடாது அந்த எண்ணத்தை நீர்த்துப் போகவிடாமல்  இருத்தல் வேண்டும் .  விளக்கம்  :    நாம் நினைப்பதெல்லாம் எப்போதும்    உயர்ந்ததாகவே   இருக்கட்டும்.   அது கைகூடாமல் போகலாம். தப்பே இல்லை.    அதற்காக அந்த முயற்சியை மட்டும் ஒருபோ...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப

Image
  எண்ணென்ப ஏனை எழுத்தென்ப... " எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்     கண்ணென்ப வாழும் உயிர்க்கு"                                             குறள். :  392 எண்ணென்ப  _ கணிதம் என்று சொல்லப்படுவது ஏனை  _  மற்றும் எழுத்தென்ப  _  எழுத்து எனப்படுவது இவ்வி்ரண்டும் _ இவை இரண்டும் கண்ணென்ப  _ கண் விழி என்று சொல்லப்படுகிறது வாழும் உயிர்க்கு _ சிறப்பாக வாழும் உயிர்களுக்கு. எண் என்று சொல்லப்படுகிற கணிதமும் எழுத்து எனப்படும்  மொழி அறிவும் ஆகிய இவ்விரண்டும் வாழும் சிறப்புடைய உயிர்களுக்கு  கண் எனப்படும். விளக்கம்  :   எண் என்று சொல்லப்படுகின்ற கணித  அறிவு  அனைத்துத் துறைகளிலும் முதன்மையாகக்  கருதப்படுகிறது. அந்தக் கணித அறிவு இல்லாமல்  ஒன்றுமே செய்ய முடியாது.  வாழும் உயிர்க்கு கணித அறிவு   மிகவும் இன்றியமையாத ஒன்று.    எண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ ...

பழியஞ்சிப் பாத்தூண்....

    பழியஞ்சிப் பாத்தூண்....  " பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை  வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் "    (  குறள் : 44 )   எந்தவித பழி பாவமும் இல்லாத  வழியில் பொருளைத் தேடி ,  அப்படி தேடிய பொருளை பக்குவமாக  தன் உறவுகளோடு பகிர்ந்து உண்டு  வாழ்பவனுடைய பரம்பரை ஒருபோதும்  அழிந்து போவதில்லை. பழி _  தீவினை, குற்றம் அஞ்சி _ பயந்து ,நடுங்கி பாத்து  _ பிரித்துக் கொடுத்து ஊண்  _ உண்ணுதல் உடைத்தாயின் _ உடையதானால் வழி  _ நெறி , ஒழுங்கு எஞ்சல் _ மிஞ்சுதல் ,குறைதல் எஞ்ஞான்றும் _ எப்போதும் இல் _ இல்லை விளக்கம் :   அற வழியில்  மட்டுமே பொருள் தேட வேண்டும். எப்படியாவது பொருள் ஈட்டினால் போதும் என்று பழிபாவங்கள் செய்து பொருள் ஈட்டினால் அது என்றாவது துன்பத்தில் கொண்டு விட்டுவிடும்.  நல்வழியில் தேடிய பொருளையும் தான்   மட்டுமே வைத்து அனுபவிக்காதபடி   அனைவரோடும் பகிர்ந்து கொடுத்து    உண்ணும் நற்பண்பு வேண்டும்.  அப்படி வாழ்ந்தால் அவன் பரம்பரை   என்றென்றும் இட...

மோப்பக் குழையும் அனிச்சம்....

Image
மோப்பக் குழையும் அனிச்சம்.... " மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து  "                            குறள்   :  90 மோப்ப  _ முகர்ந்து பார்த்ததும் குழையும் _ வாடிவிடும் அனிச்சம் _ ஒரு வகை மலர் முகந்திரிந்து _ முகம் வேறுபட்டு நோக்க  _ பார்க்கும் போது குழையும்  _ சுருங்கும், வாடும் விருந்து  _ ,விருந்தினர் அனிச்ச மலர் முகர்ந்து பார்த்ததுமே வாடிவிடும். முகத்தில் மலர்ச்சி இல்லாமல் முகங்கோணி இருப்பதைப்  பார்த்ததுமே  விருந்தினர்  முகம் வாடிவிடுவர். விளக்கம்  :  அனிச்சம் மலர் என்று ஒரு மென்மையான மலர்  இருந்ததாக சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.  அந்த மலரானது நாம் முகர்ந்து பார்ப்பதற்காக   முகத்தை அருகில் கொண்டு சென்றாலே போதும்.  அப்படியே  வாடி விடுமாம்.   ஆனால் விருந்தினர்  அருகில்  சென்று பார்க்க வேண்டியதில்லை. தூரத்தில் இருந்து வரும்போதே  நம் முகக் குறிப்பின்மூலம் விருப...

சோறு வேணும்

Image
            சோறு வேணும்  "பாட்டி....பாட்டி..." "எதுக்கு கத்துறே... மெதுவா கூப்பிட முடியாது " "எனக்கு சோறு வேணும்..." "கொஞ்சம் பொறு... ரேசன் கடையில ரேசன் போடுறாவளான்னு பார்த்துட்டு  வர்றேன்."   " எனக்கு இப்ப சோறு வேணும்...வேணும்..  வேணும்."பிடிவாதம் பிடித்தான் முகிலன்.   " ஒரு அரைமணி நேரம் பொறு....  கஞ்சி வச்சு தர்றேன்" " வயிறு பசிக்குது...பசிக்குது..பசிக்குது..." " சொன்னா கேட்க மாட்ட ....  பானையில கொஞ்சம் பழந்தண்ணி  கிடக்கு. ஒருவாயி குடிச்சிட்டு  கொஞ்ச நேரம் தூங்கு..." "எனக்கு கஞ்சி வேண்டாம் .... சோறு வேணும் ....சோறு வேணும்... சோறு வேணும் " "பள்ளிக்கூடம் திறக்குறது வரை சோத்து நினைப்பே வரக்கூடாது. பேசாம ...கொடுக்குறத தின்னுகிட்டு கிடக்கிறத பாரு "கோபப்பட்டார் பாட்டி. "பள்ளிக்கூடம் எப்போ திறக்கும் " "நான் என்னத்த கண்டேன்....அது திறக்குற நேரம் திறக்கும் "  அப்போது பக்கத்து வீட்டுப் பெண் சுசிலா வந்து,  " செல்லத்தாயி அக்கோ ....உங்கள  கங்காணி அண்ணன் வரச்சொன்...

அகர முதல எழுத்தெல்லாம்.....

Image
          அகர முதல எழுத்தெல்லாம்......    " அகர முதல எழுத்தெல்லாம் ஆதி     பகவன் முதற்றே  உலகு  "                           குறள்.  :  1 அகர _ 'அ ' எனத் தொடங்கும் அகர வரிசை முதல _ முதலாக உடையன  எழுத்து _ எழுதப்படுவது, எல்லாம் _ அனைத்தும்  ஆதி   _ தொடக்கம் , மூலம் , அடிப்படை  பகவன் _ இறைவன், படைத்தவன் ,முதல்வன்,                  கடவுள், தலைவன் உலகு _ உலகம் எழுத்துகள் எல்லாம் அகரத்தை தமக்கு  முதலாகக்கொண்டுள்ளன.   அதுபோல உலகம் கடவுளை முதலாகக்  கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.   விளக்கம்  : எழுத்துகள் எல்லாம் அகரமாகிய எழுத்தை  தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.  அகரம்தான் நெடுங்கணக்கு எழுத்துகளில்  முதன்மையானது.    அகரம் எல்லா எழுத்துகளிலும்   கலந்து, இயக்கி, தானும் தனியாக   இயங்கும்  தன்மை பெற்றது.  அதுபோல இறை...

பீலேயாமும் கழுதையும்

Image
                பீலேயாமும் கழுதையும்                             நாடகம்                   காட்சி ஒன்று                           இடம் :  பாலாக் மன்னனின் அரண்மனை உறுப்பினர்கள்  :( பாலாக், அமைச்சர், தளபதி, வீரர்கள்) பாலாக்:   :  அமைச்சரே !  என்ன இது ... மாடுகள்  மந்தை மந்தையாக    மேய வருவதுபோல ஒரு கூட்டம் மக்கள் நம் தேசத்தை நோக்கி வருவதாக செய்தி வந்திருக்கிறதே , உண்மைதானா? அமைச்சர். :  "ஆம் மன்னா...நானும் கேள்விப்பட்டேன். இஸ்ரவேலர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் மக்கள் வந்ததாக கூறுகின்றனர். பாலாக் : " இஸ்ரவேலரா? அவர்களுக்கு நம் நாட்டிற்குள் என்ன வேலை....?உடனே துரத்தி அடியுங்கள். அமைச்சர்  .: இதோ வீரர்களை அனுப்புகிறேன் மன்னா.. (அ...