Posts

Showing posts with the label ஈ ஏற மலை குலுங்குமா-காளமேகம்

ஈ ஏற மலை குலுங்குமா

ஈ ஏற மலை குலுங்குமா ஒரு குறிப்பிட்ட சொல்லைக் கொடுத்து இந்தச் சொல்லில் உடனே கவி பாடுக என்று கேட்டுக் கொண்டதும் அதிக  நேரம் எடுத்துக்கொள்ளாமல்    உடனே பாடுவது ஆசுகவி எனப்படும் . ஆசுகவி என்றதும் முதல் ஆளாக கண் முன்னர் வந்து நிற்பவர் கவி காளமேகம் . பருவத்தில் பொழியும் மழை போலன அல்லாமல்   கருக்கொண்டதும் பொழியும் மேகம் போல விரைந்து பாடும் ஆற்றல் காளமேகப் புலவரிடம்  உண்டு. இவர் நாற்கவியிலும் பாடும்  புலமையுடையவர். இவருடைய பாடல்கள்   சொற்சுவை, பொருட்சுவை கொண்டவையாக இருக்கும்.   இத்தகைய தனித்தன்மை காளமேகப் புலவரிடம் உண்டு..  எப்போதும் ஒருவருடைய திறமையை மற்றொருவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும். அவர் ஒன்றும் அப்படியொரு புலமைமிக்கவரல்ல என்பதை நாலுபேர் மத்தியில் மெய்ப்பித்துவிட வேண்டும் என்று மனம் துடியாய்த் துடிக்கும். இது பொறாமையின் வெளிப்பாடு. அதனால் சாத்தியமில்லாதது என்று நினைக்கும் ஒரு எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ கொடுத்து ஒரு பாடல் பாடுக என்று கேட்டு  காளமேத்தை மடக்க வேண்டும் என்று பலர் கேட்டு தோற்றுப்போனதுண்டு. இந்த வரலாறு தெரியாமல்...