Posts

Showing posts with the label நீதி சொல்லும் சேதி

நீதி சொல்லும் சேதி

                            நீதி சொல்லும் சேதி                                        விழித்திரு. ஏழாம் நாள்   என் போதகத்தை விரல்களில் கட்டி  அவைகளை உன் இருதயப் பலகையில் எழுதிக்கொள்                                       நீதிமொழிகள்  7 :3 கர்த்தரின் வார்த்தைகள் எப்போதும்  உன்னோடு பேசும். நீ நடக்க வேண்டிய வழியைக் காண்பிக்கும்.  எல்லாவித உலகப் பிரகாரமான தீங்குக்கும்  விலக்கிக் காக்கும். ஆதலால் தேவ வசனத்தை உன் இருதயமாகிய பலகையில் எழுதி வைத்துக் கொள். ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்  நாளும் ஒரு நீதியை ஒற்றை வாக்கியத்தில்  கையில் எழுதிவர கூறுவாராம். மாணவர்களும் தேடிப்பிடித்து கையில்  எழுதி வந்து விடுவராம். முன்னால் வந்து ஒவ்வொருவராக தாங்கள்  எழுதி வந்ததை வாசிக்க வேண்டும் . கொஞ்ச நாள...

நீதி சொல்லும் சேதி

                            நீதி சொல்லும் சேதி ஆறாம் நாள்                               விழித்திரு " சோம்பேறியே எறும்பினிடத்தில் போய்  அதின் வழிகளைப் பார்த்து  ஞானத்தைக் கற்றுக்கொள்."                                        நீதிமொழிகள் 6: 6                                         எறும்பு அற்பமான பூச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவை மழைக்காலத்திற்காக  கோடைகாலத்திலேயே உணவை சேமித்து வைத்துவிடும். மழைக்காலம் வரட்டும் பார்த்துக்  கொள்ளலாம் என்று சும்மா இருப்பதில்லை.  தங்கள் உணவை தாங்களே தேடிக்   கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும்.  நான் முந்தி நீ முந்தி என்று   முண்டியடித்துக் கொண்டு செல்வதில்லை. ...

நீதி சொல்லும் சேதி

                   நீதி சொல்லும் சேதி                            ஐந்தாம் நாள்.             உனக்குள்ளவற்றில் திருப்தியாய் இரு              உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும் உன் துரவில் ஊறுகிற ஐலத்தையும்  பானம் பண்ணு. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல் உனக்கே  உரியவைகளாயிருப்பதாக.                                                         நீதிமொழிகள்: 5:15 :17   பார்க்கிற யாவும் பகட்டாக தெரியும்.  என்னை உனக்குரியதாக்கிக் கொள் என்று   கெஞ்சுவது போல் இருக்கும்.  ஆனால் உன் கண்கள் உண்டாக்கும்   இடறல்களுக்கு உன்னை நீங்கிக் காத்துக் கொள்.  உன் நண்பன் அழகான பேனா வைத்திருக்கிறான். உனக்கும் அப்படி ஒரு பேனா வாங்க  வேண்டும் என்றுஆ...

நீதி சொல்லும் சேதி

                          நீதி சொல்லும் சேதி                                நான்காம் நாள்                      இடறலுக்கு விலக்கிக் காப்பார்                          " நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை. நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்"                                                             ...

நீதி சொல்லும் சேதி

                    மூன்றாம் நாள்                         உதவி செய்  "நன்மை செய்யும்படி உனக்குத்  திராணியிருக்கும்போது அதைச் செய்யத் தக்கவர்களுக்குச்  செய்யாமல் இராதே"                        நீதிமொழிகள் 3   :  27    நானா....நான் என்ன செய்ய முடியும்? நீ...நீயேதான் உன்னால் செய்யக் கூடியவை  ஏராளம் உன்னிடம் உள்ளன. என்னிடம் என்ன இருக்கிறது  என்று எண்ணாதே . கர்த்தர் கொடுத்த நல்ல உள்ளம் இருக்கிறது. அருமையான கால்களும் கைகளும்  இருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு என்ன வேண்டும்? இவற்றை வைத்து ஏராளமான உதவிகளைத்  தாராளமாகச் செய்யலாம் .கண்ணில்லாத  பெரியவருக்கு ரோட்டைக் கடக்க உதவி செய்யலாம். நண்பனுக்கு பாடம் சொல்லித்தரலாம். பேனா இல்லாத மாணவனுக்குப் பேனா  கொடுத்து உதவலாம். வீட்டில் அம்மா அப்பாவுக்கு உதவலாம்.  வாட்டர் பாட்டிலில் மீதம் இருக்கும்  தண்ணீரைச் செடிக...

ஞானத்தைத் தேடு

நீதி சொல்லும் சேதி                                     ஞானத்தைத் தேடு      " ஞானத்தை வா என்று கூப்பிட்டு      புத்தியைச் சத்தமிட்டு அழைத்து      அதை வெள்ளி போல் நாடி      புதையல்களைத் தேடுகிறது போல் தேடு"                                                       நீதிமொழிகள் 2  -(3 ..4) தேடல் என்பது அதிகாலை முதலே  அனைத்து உயிரினங்களிடமும் தொடங்கிவிடும். பறவைகள் கூட்டைவிட்டு இரை தேட பறக்கின்றன. பட்டாம்பூச்சி அதிகாலையில் மலரும்  பூக்களில் மதுவைத் தேடும். காட்டு விலங்குகள் எல்லாம் இரை தேட கிளம்பிச் செல்கின்றன. மனிதர்களிடமும் தேடல் பல விதமாக  நடைபெற்றுக் கொண்டே இருக்கும். உணவுக்கானத் தேடல்... அறிவுக்கான தேடல்... பணத்திற்கான தேடல்... வேலைக்கான தேடல்.. ஆத்ம அமைதிக்கான தேடல்... என்று தேடல் பலவிதங்கள...

நீதி சொல்லும் சேதி

        அளவோடு பேசு " சொற்களின் மிகுதியில்  பாவமில்லாமல் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்"                                நீதிமொழிகள்    10  :19 "சோம்பற் கையால் வேலை  செய்கிறவன் ஏழையாவான். சுறுசுறுப்புள்ளவன் கையோ  செல்வத்தை உண்டாக்கும்"                                          "ஒருசொல் வெல்லும் ;ஒரு சொல் கொல்லும்." தேவையில்லாமல் பேசக்கூடாது. பேசினால் ஏதாவது வம்புதான் வந்து சேரும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சிலர்   லொட லொடவென்று பேசிக்  கொண்டே இருப்பார்கள். எப்போது பேச்சை முடிப்பார்கள் என்று எரிச்சல் வந்துவிடும்.              அமெரிக்க அதிபராக இருந்த     ஆபிரகாம் லிங்கன் நல்ல பேச்சாளர். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னர்  அதிகம் பேசுவதைத் தவிர்த்தார். தேர்தல் காலத்தில்...

நீதி சொல்லும் சேதி

              விழித்திரு " சோம்பேறியே எறும்பினிடத்தில் போய்  அதின் வழிகளைப் பார்த்து  ஞானத்தைக் கற்றுக்கொள்."                                        நீதிமொழிகள் 6: 6                                         எறும்பு அற்பமான பூச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவை மழைக்காலத்திற்காக  கோடைகாலத்திலேயே உணவை சேமித்து வைத்துவிடும். மழைக்காலம் வரட்டும் பார்த்துக்  கொள்ளலாம் என்று சும்மா இருப்பதில்லை.  தங்கள் உணவை தாங்களே தேடிக்   கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும்.  நான் முந்தி நீ முந்தி என்று   முண்டியடித்துக் கொண்டு செல்வதில்லை.  எல்லாவற்றலும் ஒரு ஒழுங்கைக் கடைபிடிக்கும்.   நாளைக்கான காரியங்களில் அதிக    கவனமாக இருக்கும்.  சுறுசுறுப்பாக சதா வேலைசெய்து  கொண்டே இருக்கும். சோம்பலாக ஓ...

நீதி சொல்லும் சேதி

        நீதி சொல்லும் சேதி   மகனே உன் தகப்பன் புத்திமதியைக் கேள்   உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே"                                                     நீதிமொழிகள்  1 :8 எந்த பொருளின் மதிப்பும்  இருக்கும்வரை நமக்குத் தெரிவதில்லை.      கைவிட்டுப் போன பின்னே அதைப்பற்றி  ஆகா...ஓகோ...என்று வானளாவ புகழ்ந்து கொண்டிருப்போம்.      கிட்ட இருந்தால் முட்டப்பகை. தூர இருந்தால் சேர உறவு. அறிவுரை என்றாலே காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடுவோம்.     அம்மா அப்பாவை பிள்ளைகள் வெறுக்கிற ஒன்று உண்டென்றால் இந்த அறிவுரைக்காக மட்டுமாகத்தான் இருக்கும்.     வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது.     கேட்பதற்காகவே காதுகளை இறைவன...