இன்னா செய்தாரை ஒறுத்தல்.....
இன்னா செய்தாரை ஒறுத்தல்.... " இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் " குறள் : 314 இன்னா _ துன்பம் , தீங்கு செய்தாரை _ செய்தவரை ஒறுத்தல் _ தண்டித்தல் நாண _ நாணும்படியாக, வெட்கும்படியாக நன்னயஞ் _ நல்ல செயல் , நன்மை செய்துவிடல் _ செய்து விட வேண்டும் நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிப்பதற்கான ஒரே வழி என்னவென்றால் அவர் வெட்கித் தலைகுனியும் படியாக நன்மை செய்துவிடுதலே ஆகும். விளக்கம் : ஒருவர் நமக்குத் தீமை செய்துவிட்டார் என்றால் அதையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இருக்காது. அதற்குப் பதிலாக நாமும் பழிக்குப் பழி என்று ஏதாவது செய்துவிட்டால் அது தீராப் பகையில் வந்து முடியும். மன்னித்து விட்டோம் என்றாலும் அப்போதைக்கு அந்தப் பிரச்சின...