Posts

Showing posts with the label சோத்துக் கணக்கு -சிறுகதை

சோத்துக் கணக்கு

சோத்துக்கணக்கு  ஒரு மாசமா உங்க அம்மா  இங்கேயே இருக்குறாங்க... ஊருக்கு எப்ப போவாங்களாம்?" காலையிலேயே தன் கோபத்தை சுரேஷ் முன் கொட்டினாள் பாலா. "ஏன்...எங்க அம்ம இங்க இருப்பதுல உனக்கு என்ன கஷ்டம் " "நீங்க விடிஞ்சா போயிட்டு அடைஞ்சா வாரீங்க...உங்களுக்கு வீட்டில் என்ன நடக்கு யாது நடக்கு என்று என்ன தெரியும்?" "அப்படி எனக்குத் தெரியாம இங்க என்னதான் நடக்கு ....?" "ஒண்ணும் நடக்கல..." "காலையில் வேலைக்குப் போகும்போதே உன் புராணத்தை தொடங்கிட்டியா?" "உங்களுக்கு எது சொன்னாலும் புராணமாத்தான் தெரியும்" ஒண்ணும் சொல்லல...கண்ணைக் கசக்கி கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் பாலா. பாலா தாயம்ம பாட்டியின் இரண்டாவது மகன் சுரேஷின் மனைவி. சுரேஷ் நல்ல வேலையில் இருப்பதால் வசதியான குடும்பத்திலிருந்து பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார் தாயம்ம பாட்டி. பாலாவுக்கு சுரேஷ் குடும்பத்தைப் பார்த்தாலே ஆகாது. நாங்க பெரிய குடும்பம் .... நாங்க பெரிய குடும்பம் என்று எப்போதும் சிலுப்பிக் கொள்வாள்.  சந்தோசமாக தன் குடும்பதோடு இருப்பதற்கு சுரேஷ் குடும்பத்தினர் தடையாக வ...