காக்கை கரவா கரைந்துண்ணும்....
காக்கை கரவா கரைந்துண்ணும்.... "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள " குறள் : 527 காக்கை - காகம் கரவா - மறைக்காது கரைந்து - கூவி அழைத்து உண்ணும் - தின்னும் ஆக்கமும் - உயர்வும் , பெருக்கமும் அன்ன - அதுபோன்ற நீரார்க்கே - தன்மையுடையவர்க்கே உள - உண்டாகும், இருக்கும். காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி அழைத்து உடனிருந்தே உண்ணும். அத்தகைய பண்பு கொண்டவர்களோடு மட்டுமே சுற்றம் கூடி இருக்கும். விளக்கம் : தனக்கு வளமான வாழ்க்கை வாய்த்தபோது சுற்றத்தை மறந்துவிடக் கூடாது. அவர்களையும் அழைத்து அவர்களுக்கும் கொடுத்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இன்சொல் பேசி நம்மோடு எப்போதும் ஒரு இணக்கமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட வேண்டும். தம்மிடம் செல்வம் வந்து சேரும்போது உறவுகளோடு பகிர்ந்து உண்ணும் பண்பு வர வேண்டும். அன்னநீர்மை கொண்டவர் என்பவர் யார் ? ஒரு பருக்கை கிடைத்தாலும் கா.. கா...என்று தன் உறவுகளை அழைத்து கூடி இருந்து உண்ணும் காக்கையைப்...