மனிதநேயம்
மனிதநேயம் " பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் " என்றார் வள்ளுவர். மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் உயிரோட்டமாக இருந்து இயக்கிக் கொண்டிருப்பது மனிதநேயம். மனிதம் இல்லா மனிதன் மனிதனே அல்ல... அவன் மனிதனாகவே கருதப்படமாட்டான். மாக்கள் என்ற வரிசையில் வைத்து எண்ணப்படுவான்...இல்லை..இல்லை... விலங்குகள்கூட பல நேரங்களில் தம் இனத்துக்காகப் போராடி தங்களுக்கு மனிதநேயம் இருக்கிறது என மெய்பிக்கப் போராடும் காட்சிகளைக் நாம் கண்டிருக்கிறோம். அதுவும் இல்லாத மனிதர்களை என்னவென்பது? மனித நேயம் என்றால் என்ன என்று கேட்டால் சக மனிதர்கள்மீது இரக்கம் காட்டுவது...அதாவது உயிர்கள்மீது கருணை காட்டுவது...என்பது எல்லோரும் சொல்லும் செய்திதான். அந்தக் கருணையும் இரக்கமும் உள்ளதால்தான் அன்னை தெரசாவையும் அப்துல் கலாமையும் காந்தியடிகளையும் மனிதநேயம் மிக்க மாமனிதர்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். விரல்விட்டு எண்ணும்படி...