சிலேடை சிதறல்கள்
சிலேடை சிதறல்கள் ஒருசொல்லோ சொற்றொடரோ இரு பொருள்படும்படி சொல்லப்படுவதை சிலேடை என்பார்கள். ஓடு என்றால் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுபவர்களும் உண்டு. எங்கே ஓடு...எங்கே ஓடு என்று அண்ணாந்து கூரையைப் பார்ப்பவர்களும் உண்டு. ஆடு என்றதும் சிலர் ஜங்...ஜங்... என்று ஆடித் தீர்த்துவிடும் ஆட்கள் உண்டு. எங்கே ஆடு ...எங்கே ஆடு .... கொழுத்த ஆடா? ஆட்டுக் கறி சாப்பிட்டு நாளாகுது என்று ஆட்டைத் தேடுபவர்களும் உண்டு. இப்படி பல இரட்டை அர்த்த சொற்களை நாம் கேட்டிருப்போம். அவற்றைத் தகுந்த இடங்களில் கையாளத் தெரிந்தவர்கள்தான் சிறந்த பேச்சாளர்களாக இருக்கின்றனர்.புலமை மிக்கவர்களாகவும் அடையாளம் காணப்படுகின்றனர். இரண்டு பொருள்படும்படி பேசி மக்களிடம் கைத்தட்டல் வாங்கினால்தான் சிறந்த பேச்சாளர் என்ற பெயரும் கிடைக்கிறது. சிலைடையில் பேசி அசத்திய தலைவர்களின் பேச்சிலிருந்து ஒன்றிரண்டை உங்களுக்காக தந்துள்ளேன். நீங்களும் ச...