சொல்லுக சொல்லிற் பயனுடைய...
சொல்லுக சொல்லிற் பயனுடைய.... " சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் " குறள் : 200 சொல்லுக _ பேசுக சொல்லிற் _ சொல்ல வேண்டுமிடத்து பயனுடைய _ பயனை விளைவிக்கக் கூடிய சொல்லற்க _ சொல்லக் கூடாது சொல்லிற் _ சொற்களில் பயனிலா _ நன்மை தராத , பொருளற்ற சொல் _ பேச்சு , மொழி சொல்லும் சொற்கள் பிறருக்கு பயன்தரும் விதத்தில் சொல்லுதல் வேண்டும். எந்தவிதத்திலும் பயன்தராத சொற்களை ஒருபோதும் பேசுதல் கூடாது. விளக்கம் : சொல்லுக என்று சொல்லுவதனால் பேச வேண்டும் . பேசாதிருத்தல் கூடாது. அப்படிப் பேசும்போது பயனுள்ள சொற்களை மட்டுமே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள். முடிவில் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. கேட்டவருக்கு எ...