படிக்கத் தவறிய பாடம்
படிக்கத் தவறிய பாடம் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு விதமான பாடத்தைக் கற்பித்துச் சென்று கொண்டிருக்கிறது. நல்லதோ கெட்டதோ நாளும் நம் கண்முன் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நல்லவைவற்றைக் காணும்போது கண்களை அகல விரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். தீயவற்றைக் காணும்போது முகம் அப்படியே சுருங்கிப் போகிறது. சோர்ந்து போய்விடுகிறோம். அனைவரின் மனநிலையும் இப்படித்தான் இருக்கும். கும்மாளமும் குழப்பமும் இல்லாமல் யாரும் நாட்களை கடத்தி வந்திருக்க முடியாது. விடியலில் இருந்து நடந்தவற்றை மீள்பார்வை செய்து பார்ப்போமானால் இந்த உண்மை புரியும். இந்த நாள் நமக்கு நடத்திச் சென்ற பாடம் என்ன ? கடந்து வந்த நாட்களில் நாம் கற்றுக் கொண்டது என்ன ? பாடம் என்ன என்று தெரியும். பாடத்தின் மூலமாக சொல்லப்பட்ட கருத்து பல நேரங்களில் விளங்காது. விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்காது. மனப்பக்குவமும் போதாது. எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள ஆசிரியரிடம் செல்லவும் முடியாது. நாமாக விளங்கிக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்தவற்றை மீள்பார்வை செய்து பார்க்கும்போது பல உண்ம...