செல்லாமை உண்டேல் எனக்குஉரை....
செல்லாமை உண்டேல் எனக்குஉரை... " செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை " குறள் : 1151 செல்லாமை _ செல்லாதிருத்தல் உண்டேல் - இருப்பதானால் எனக்கு - என்னிடத்தில் உரை - சொல் மற்று - அவ்வாறன்றி நின் - உனது வல் - விரைவாக வரவு - வருகையை வாழ்வார்க்கு - உயிர் வாழ்பவர்க்கு உரை - சொல் பிரிந்து செல்லாதிருப்பாயானால் என்னிடம் சொல். பிரிந்து சென்று விரைந்து வருவேன் என்று கூறுவாயானால் அதுவரை உயிர்வாழ வல்லவருக்குச் சொல். விளக்கம் : புதிதாக இல்லறத்தில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் முதன்முதலாக பிரிந்து செல்லும்போது இருக்கும...