Posts

Showing posts with the label முளி தயிர் பிசைந்த காந்தள்...- பாடல் விளக்கம்

முளி தயிர் பிசைந்த

Image
முளி தயிர் பிசைந்த காந்தள்.... அப்பாக்களுக்குப் பெண் பிள்ளைகள் மீது பாசம் அதிகம். தன் பெண்ணை தன் அம்மாவின் மறு உருவமாகவே பார்ப்பர்.   மகள் கண்கலங்கினால்  அப்பாக்களுக்குப் தாங்காது மனசு. கேட்டதை கேட்டதும் எப்பாடுபட்டாவது வாங்கிக் கொடுப்பர். அப்பாச் செல்லம் என்றுதான் சொல்ல வேண்டும். பெண் பிள்ளைகளின் ஓட்டும் அம்மாவுக்குத்தான். அப்பா கரம் பிடித்து நடப்பதில் ஆனந்தம். அப்பா தன் மகளுக்குப் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்து வைப்பார். ஒரு நினைப்பு வந்ததும் ஓடிச் சென்று பார்த்து வருவார். கண்களாலேயே தன் மகள் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா என அறிந்து  கொள்வார். அப்பா  தரப்பு இப்படியிருக்க , மகளுக்கு தன் புகுந்த வீட்டின் மரியாதையினைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது. எந்த இடத்திலும் தன் கணவனை விட்டுக்  கொடுத்துவிடக் கூடாது. அதற்காக மெனக்கெடுவது... குறிப்பாக கணவன் வீட்டு வறுமையை வெளியில் தெரியாமல் மறைப்பதில் பெண்பிள்ளைகள் புத்திசாலிகள்.சாமர்த்தியசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுதானே வேண்டும். அம்மாக்களுக்கு வேறுவிதமான கவலை. அது என்ன வேறுவ...