Posts

Showing posts with the label செந்தமிழ் நாடெனும் போதினிலே....பாரதியார் பாடல்

செந்தமிழ் நாடெனும் போதினிலே....

செந்தமிழ் நாடெனும் போதினிலே.... செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..." இந்தப் பாடலை உச்சரிக்கும் போதே உதடுகள் இனிக்கும். செவிகள் தேனினிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மகிழ்வில் சிலிர்க்கும். எத்தனை முறை கேட்டாலும்  இன்னொருமுறை இன்னொருமுறை என இதயம் கேட்கும். என் தமிழ்நாடு ....என் தமிழ்நாடு என்று உரக்கக் கத்த வேண்டும் என்று உள்ளம் துடிக்கும். தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்ததொரு நிறைவு இருக்கும். பாடியவர் பாரதியார் என்பது நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும் பாடல் எளிமையானது தான். பள்ளிப்பருவத்தில் அனைவரும் பாடி ஆடி மகிழ்ந்த பாடல். பாடல் உங்களுக்காக...                   செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே             (   செந்தமிழ்.....) காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி-என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு       ...