நாயைக் கண்டால் கல்லை காணோம்...
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.... நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" இது வேடிக்கையாக சொல்லப்படும் பழமொழி. சிலருக்கு எப்போதும் நாயைக் கண்டால் போதும். கை தானாக கல்லை எடுத்துவிடும். நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக கையில் கல்லைத் தூக்கிவிடுவர். இன்னும் சிலரோ நாய்மீது கல்லெரிந்துவிட்டு நாய் காலைக் காலை உயர்த்தி நொண்டிக் கொண்டே ஓடுவதைப் பார்த்து இன்புற வேண்டும் என்று ஒரு அற்ப ஆசை. இப்படி கல்லுக்கும் நாய்க்கும் தொடர்பு இருக்கோ இல்லையோ நமக்கும் கல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் பழமொழி என்பது வெறுமனே சிரித்து மகிழ மட்டுமே கூறப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாது. அதனால் இந்தப் பழமொழிக்கு உள்ளார்ந்த இன்னொரு பொருள் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அது கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கலாம். அல்லது நாம்தான் அதன் உண்மையான பொருளைத் தேடாமல் விட்டிருக்கலாம். இப்போது அதன் உண்மையான பொருள் என்னவாக இருந்திருக்கும் என்பதைப் தேடித்தான் பார்ப்போமே! ஒரு பெரிய மனிதர் தன் தோட்டத்துக் காவலுக்காக...