மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி... " மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் " குறள் :70 மகன் _ புதல்வன் தந்தைக்கு _ அப்பாவுக்கு ஆற்றும் _ செய்கின்ற உதவி _ நன்மையான செயல்,கைமாறு இவன்தந்தை _ இவனது தகப்பனார் என்நோற்றான் _ என்ன நோன்பு செய்தான் கொல் _ ஐயம்( இடைச்சொல் ) எனும் _ என்று கூறப்படும் சொல் _ சொல்லும்படியான மொழி மகன் தந்தைக்கு செய்யும் உதவி யாதெனில் இவனுடைய பெற்றோர் இப்படிப்பட்ட மகனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தனரோ என பெருமைப்படும் விதமாக இருத்தல் வேண்டும். விளக்கம் : மொத்தத்தில் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பிள்ளைகள் இருத்தல் வேண்டும். இப்படி ஒரு பிள்ளை பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் உலகம் மெச்சவேண்டும். என்ன புண்ணியம் பண்ணினனோ நீ வந்து பிறந்திருக்கிறாய் என்று பெற்றோர் எண்...