எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப... " எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" குறள். : 392 எண்ணென்ப _ கணிதம் என்று சொல்லப்படுவது ஏனை _ மற்றும் எழுத்தென்ப _ எழுத்து எனப்படுவது இவ்வி்ரண்டும் _ இவை இரண்டும் கண்ணென்ப _ கண் விழி என்று சொல்லப்படுகிறது வாழும் உயிர்க்கு _ சிறப்பாக வாழும் உயிர்களுக்கு. எண் என்று சொல்லப்படுகிற கணிதமும் எழுத்து எனப்படும் மொழி அறிவும் ஆகிய இவ்விரண்டும் வாழும் சிறப்புடைய உயிர்களுக்கு கண் எனப்படும். விளக்கம் : எண் என்று சொல்லப்படுகின்ற கணித அறிவு அனைத்துத் துறைகளிலும் முதன்மையாகக் கருதப்படுகிறது. அந்தக் கணித அறிவு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. வாழும் உயிர்க்கு கணித அறிவு மிகவும் இன்றியமையாத ஒன்று. எண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ ...