Posts

Showing posts with the label நேரமில்லைக்கு நேரமில்லை -வெற்றிக்கணக்கு

நேரமில்லைக்கு நேரமில்லை

நேரமில்லைக்கு நேரமில்லை  "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" ஒவ்வொருவருக்கும் காலையில் எழும்பியதுமே கையில் இருபத்து நான்குமணி நேரத்தைக் கொடுத்துதான் அனுப்புகிறார் கடவுள். கிடைத்த அந்த இருபத்து நான்குமணி நேரமும் எப்படி செலவிடப்படுகிறது என்பதில்தான் ஒருவருடைய வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும். இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?  உன் தரித்திரம் வழிப் போக்கனைப் போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப் போலவும் வரும்" என்கிறது பைபிள். நேரத்தைப் படுக்கையில் கழித்தால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவாய். எவ்வளவு பெரிய உண்மை! நாம் விரும்புகிறோமோ இல்லையோ காலையிலேயே காலமென்னும் வரம்  நம் கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டது. வரம் வாங்கி வந்த நாம் வரும் வழியிலேயே பறிகொடுத்துவிட்டு நிற்கலாமா? பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்யும்நாம் காலத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பதில்லை. காலமெல்லாம் எதற்கெல்லாமோ காத்திருந்து காத்திருந்து இருந்த காலத்தைத் தொலைத்துவிட்டு காத்திருப்பதிலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்...