Posts

Showing posts with the label வினைவலியும் தன்வலியும்...

வினைவலியும் தன்வலியும்....

Image
    வினைவலியும் தன்வலியும்..... "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் "                            குறள்   :  471 வினைவலியும் _ செயலின் வலிமையும் தன் வலியும் _ தனது வலிமையும் மாற்றான்  _பகைவன்  வலியும் _ வலிமையும் துணைவலியும் _ துணை நிற்பாரது ஆற்றலையும் ஆய்ந்து _ அளந்தறிந்து ,ஆராய்ந்து  தூக்கி _  சீர்தூக்கிப் பார்த்து செயல் _  செயலில் ஈடுபடுக  செய்யப்போகும் செயலின் வலிமை,  தனது வலிமை, பகைவரின் வலிமை, பகைவருக்குத் துணை நிற்பாரது ஆற்றல் ஆகியவறின் அளவை சீர்தூக்கிப் பார்த்து அதன் பின்னர் செயலில் ஈடுபட வேண்டும். விளக்கம்  :  முதலாவது நாம் செய்யப் போகும் செயலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக அந்தச் செயலைச் செய்வதற்கான வலிமை தன்னிடம் உள்ளதா என சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தன்னைப்பற்றிய சுய பரிசோதனை வேண்டும். மூன்றாவதாக பகைவன் வலிமையைப் பற்றிய முழு அறிவு பெற்றிருக்க வேண்டும். எதிராளியின் தி...