எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உலகிலுள்ள உயிர்கள் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. ஒன்றின்மீது இன்னொன்றுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். மரம் செடிகொடிகள் எல்லாம் வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டால்... சில்லென்று பூத்து தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றன. எதிர்பார்ப்பு நடைபெறாமல் ஏமாற்றமாகிப்போனால்... அப்படியே கூம்பி வாடி வதங்கிப் போய்விடுகின்றன. எதிர்பார்ப்பு இல்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோர்மீது எதிர்பார்ப்பு. பெற்றோருக்குப் பிள்ளைகள்மீது எதிர்பார்ப்பு. கணவனுக்கு மனைவிமீது எதிர்பார்ப்பு. மனைவிக்கு கணவன்மீது எதிர்பார்ப்பு. மாணவருக்கு ஆசிரியர்மீது எதிர்பார்ப்பு. ஆசிரியருக்கு மாணவர்மீது எதிர்பார்ப்பு. செடிகளுக்கு வான்மீது எதிர்பார்ப்பு. வானுக்கு செடிகளின்மீது எதிர்பார்ப்பு. தொழிலாளிக்கு முதலாளிமீது எதிர்பார்ப்பு. முதலாளிக்குத் தொழிலாளிமீது எதிர்பார்ப்பு. இப்படி ஒரு எதிர்பார்ப்போடுதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏழை விவசாயி ஒருவர் நாள்தோறும் கீழ்வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். " தாத்தா...கிழக்கு த...