Posts

Showing posts with the label தாயன்பு - சிறுகதை

தாயன்பு

              தாயன்பு  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தன் இரண்டு பிள்ளைகள் மற்றும் தாய் பொன்னம்மாளோடு ஆட்டோவில் வந்து இறங்கினாள் கமலம். ஆட்டோவில் இருந்த சாமான்களைக் கீழே இறக்கி வைத்தார். சாமான் எல்லாம் எடுத்துவிட்டோமா? ஏதாவது கீழே விழுந்து கிடக்கிறதா என்று ஆட்டோவுக்குள் தலையை விட்டுத் துழாவிப் பார்த்துக் கொண்டிருந்தார். "அக்கா நீங்க விடுங்க...நான் பார்க்கிறேன்....சீக்கிரம் எனக்கு காசு கொடுங்க... அடுத்த சவாரி போகணும்" அவசரப்படுத்தினார் ஆட்டோக்காரர். "இருப்பா...வந்த அவசரத்துல அப்படி அப்படியே அள்ளிப் போட்டுட்டு வந்தோம். எதுவும் விழுந்துகிழுந்து கிடக்கப்பிடாதுல்ல" என்றபடியே ஆட்டோக்குள் இருந்து தலையை வெளியில் எடுத்தார் கமலம். "ஏல ...எல்லா சாமானும் இருக்கா என்று எண்ணி பார்த்துகிட்டியளா... இரண்டு சூட்கேசு, இரண்டு அட்டைப்பெட்டி ஒரு குட்டிச்சாக்கு, இரண்டு சோத்துப் பை தண்ணி கேனு ஒண்ணு, கைப்பை ஒண்ணு மொத்தம் ஒன்பது உருப்படி. நல்லா எண்ணிகிட்டியளா...."என்று மகன்களைப் பார்த்துக் கேட்டார். "எம்மோ அண்ணன் பள்ளிகூடத்துப் பை ஒண்ணு......