Posts

Showing posts with the label சங்க இலக்கியத்தில் காதல்-வெள்ளிவீதியார்

சங்க இலக்கியத்தில் காதல்

சங்க இலக்கியத்தில் காதல் சங்க இலக்கியம் என்றதுமே  அது படித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதுபோல முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு ஒதுங்கி  நின்று விடுவோம். காரணம் பல சொற்கள் பொருள் புரியாததுபோல இருப்பதுதான். படித்தவர்களும் இதைப்போய் யார் படிப்பார்கள் என்று சாதாரணமாகக் கடந்து போய்விடுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள் மட்டும் மாங்குமாங்கென்று படித்து தமிழ் இலக்கிய இன்பத்தை நுகர்ந்து மகிழ்ச்சியில் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே சங்க இலக்கியம் படித்தவர்களுக்காக எழுதி வைக்கப்  பட்டதா? நமது வாழ்வியலைச் சொல்வதுதான் இலக்கியம். நாம் பார்த்த... நம்மோடு பழகிய ..! இன்றும் நாம் கண்டு சுவைக்கத் கூடிய நடைமுறை செயல்பாடுகளைக் கண்முன்  கொண்டு நிறுத்துவதாகவே இலக்கியங்கள்  இருக்கின்றன.   படிக்கப் படிக்கத் தான் இந்த  உண்மை புரியும்.   அந்த அழகியலை  அருமையான சொல்லோவியத்தை சங்க இலக்கியப் பாடல்களில்  நான் கண்டு வியந்ததுண்டு. நான் வியந்து பார்த்த அந்தக் காட்சியை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்த விழைகிறேன். அந்தக் காட்சி உங்களுக்குள்ளும்  இலக்கிய...