கவிதையாய் அம்மா
கவிதையாய் அம்மா கன்னிக் குடம் உடைத்து கனியென என்னைக் கனிவாகப் பெற்று கன்னி முத்தம் கன்னத்தில் தந்து கன்னித் தமிழ் கற்பித்து கன்னிநடை பயிற்றுவித்து கன்னித்திங்கள் காட்டி கன்னி மதிழ்சூழ முகம் கன்னிவிடாமல் காத்த கன்னி இளஞாழலான உன்னை கன்னித் தமிழால் கன்னி நெக்குருகி கண்ணம்மோ கண்ணம்மோமோவெனக் கண்கள் பனிக்க காண ஓடி வருகிறேன் காணாமல் பரிதவிக்கிறேன் கண்டாங்கிக்குள் முகம் புதைத்து கண்ணீர்விட நினைக்கிறேன் கவித்தாரும் கனித்தாரும் கரமதில் தர காத்திருந்து காத்திருந்து காத்தாடியாய்ப் பறக்கிறேன் கவிதையாய்க் கனிந்தாயே கன்னி நினைவுகளில் கரைய வைத்தாயே அம்மா! இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் 🌹 -செல்வபாய் ஜெயராஜ்