உடம்படுமெய்
உடம்படுமெய் நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்துகளே வருமானால் அச்சொற்கள் புணருங்கால் அவ்விரு உயிர் எழுத்துகளும் உடன்படாததுபோல தனித்து நிற்கும்.அவற்றை உடன்படச் செய்வதற்காக அவற்றிற்கிடையே ஒரு மெய்யெழுத்து தோன்றும். அவ்வாறு தோன்றும் மெய்கள் யகரமும் வகரமுமாகும். அதனையே உடம்படுமெய் என்கிறோம். வருமொழி முதலில் ஏதேனுமொரு உயிரெழுத்து வர நிலைமொழியீற்றில் இ , ஈ , ஐ. நின்றால் யகரமும் இவை அல்லாத பிற உயிரெழுத்துகள் நின்றால் வகரமும் ஏ நின்றால் யகரம்,வகரம் ஆகிய இரண்டுமே சொல்லுக்கு ஏற்ப வரும் என்று வீர சோழியம் என்ற இலக்கணநூல் கூறுகிறது. நன்னூலார் உயிர்முன் உயிர் புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய் வருவது பற்றி மூன்று விதிகளைக் கூறியுள்ளார். " இ , ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும் " ...