Posts

Showing posts from October, 2025

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

முட்டுவேன் கொல் தாங்குவேன் கொல்  காத்திருப்பதை மாதிரி கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. காத்திருக்கும் போது ஒவ்வொரு வினாடி  கழிவதும் ஒரு யுகம் கழிவது போல இருக்கும். சாதாரணமாக ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். ஒரு அரைமணி நேரம் பேருந்து வரவில்லையென்றால் போதும். ஒரு மாதிரியாக அங்குமிங்கும் நெளிய ஆரம்பித்துவிடுவோம். கூடவே இந்தப் பாழாய்ப் போன பேருந்து எங்கே போய் தொலைந்தது என்று பேருந்துக்கு அர்ச்சனை செய்யக்  தொடங்கி விடுவோம். மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் இருப்போம். ஆனால் எதிர்பார்ப்போடு யாரோ  ஒருவருக்காகக் காத்திருக்கும்போதுதான் அது நடைபெறாமல் போய்விடுமோ  ஏமாந்து போய்விடுவோமோ என்ற நினைப்பு வந்து எட்டிப்பார்த்து நம்மைப் புலம்ப வைக்கிறது. நாலு மணிக்கு வருகிறேன் என்று சொல்லிச்சென்ற கணவர் நாலரை வரை  வரவில்லை என்றால் ஒருமாதிரி அலைமோதுவோமே அந்த அலைமோதல் புலம்பல் எல்லாம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். அந்த வலியை உணர்ந்தவர்களுக்குத்தான் அந்த நேரத்தின் கொடுமை புரியும். மனம் தப்புத் தப்பாக கணக்குப்போடும். இதுக்குப் போய் இந்த அட்டு அலட்டுறாளே என்ற...

துளி துமியான கதை

துளி துமியான கதை புலமையும் பொறாமையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகள். நமக்கெல்லாம் பொறாமை கூடாது என்று அறிவுரை சொல்லும் புலவர்களுக்குள் பொறாமை இருந்துகொண்டிருக்கிறது என்பதற்கு பல இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. ஒட்டா ஒரு மதிகெட்டாய் என்று ஔவையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் ஒட்டகூத்தர். ஒட்டகூத்தருக்கு ஔவையிடம் மட்டுமல்ல.கம்பரோடும் மோதல் இருந்திருக்கிறது.  கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படும்போது கம்பர் எழுதிய பாடலில் துமி என்ற  சொல் இருந்திருக்கிறது. அந்தச் சொல்லை ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்திருக்கிறார். துமி என்று தமிழில் வார்த்தையே கிடையாது என்பது ஒட்டக்கூத்தரின்  வாதம். ஒட்டக்கூத்தர் சொன்னதும் மன்னருக்கும் அந்தச் சொல்லின் மீது சிறிது ஐயம் ஏற்பட்டிருக்கிறது. மன்னர் திரும்பி கம்பரைப் பார்த்திருக்கிறார்.  கம்பரோ" மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் தான் துமி.” என்று சொல்லியிருக்கிறார்.  தாங்கள் சொல்கிறீர்கள். அதனை உண்மை என்று நான் எப்படி நம்புவது என்று கேட்டிருக்கிறார் மன்னர். கம்பருக்கும் மன்னரிடம் எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை. ஒட்டக்கூத்தரின் ஆட்சேபன...

ஈரிரவு தூங்காது என் கண்

ஈரிரவு தூங்காது என் கண்  இந்த உலகில் தோல்வியைத் தழுவாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். தோல்வியடைந்து விட்டோமே என்று விரக்தியில் முட்டைக் கட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்தால் சமூகம் நம்மைத் திரும்பிப் பார்க்காது . காலமும் கண்களை மூடிக்கொண்டு எங்கேயோ ஓடிவிடும். தோல்வியடைந்து விட்டாயா? துடைத்துப் போட்டுவிட்டு மறுபடி ஓடு. மறுபடி தேடு. தேடலும்  ஓயா ஓட்டமும்  நம்மை சிகரத்தில் கொண்டு நிறுத்தி அழகு பார்க்கும். இது எல்லாத் துறைகளிலும் நடக்கும் நடந்து கொண்டிருக்கும் வெற்றிக்கான போராட்டம்தான். இது படைப்பாளிகள் அனைவருமே போராளிகள் தான். போராளிகள் எந்த இடத்திலும் தோற்றுப் போக விரும்புவதில்லை. போராளிகளிடம் மட்டும்தான் அந்தப் பண்பு இருக்கிறதா? தனிமனிதனிடமும் அந்தப் பண்பு உண்டு. யாரும் இன்னொரு மனிதனிடம் தோற்றுப்போக விரும்புவதில்லை. அப்படித் தோன்றும்போவது தன் தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைப்பர். அதுவும் தன்னைவிட வயதில் சமூக நிலையில் பொருளாதாரத்தில் அறிவில் குறைந்தவர்களிடம் தோற்றுப் போவதற்கு மனம் எந்த இடத்திலும் இடம் கொட...

நினைவுகளின் மிச்சம்

நினைவுகளின் மிச்சம்  வானிலா ஒளி வரப்பின்மீது விழ கையில் லாந்தர் ஒளி காலுக்கு வழிகாட்ட கால்கடுக்கக் கடைமடைப் பயணம் ஓடையில் ஓடும்  சிறுமீன் கண்கள்  சிதறும் நிலவொளியில் மின்னிடும் தாரகையாய் மிரட்டி அழகூட்ட வரப்பில் தாண்டி ஓடும் தவளை கால்கள் மேல் துள்ளிக் குதிக்க அச்சத்தில் நான் கால்கள் இடறி  கால்வாயில்  விழுந்த அந்தநாள் நினைவுகள் மெல்ல வந்து சிரிக்க நாணத்தால் முகம் கவிழ்ந்தேன் அவைதான் எத்துணை இனிய நாட்கள் சிள்வண்டு சுற்றி  கண்கள் காணா இடத்திலிருந்து உள்ளேன் ஐயா என்று ஒலி எழுப்ப ஒற்றைப் பறவையின் சிறகடிப்பு  தன் இருப்பை அறிவித்து மெல்ல அச்சமூட்டிச் சிலிர்க்க வைக்க .. யாருல அங்கே என் மடையை அடைத்தது என்ற பக்கத்துத் தோட்டத்து மாமாவின் குரல் அப்பப்போ வந்து ஆள் அனக்கம் இருக்கிறது அச்சம் தவிர்  என்று  தைரியம் கொடுத்துக் காதுக்குக் கதை சொல்ல அந்த நாள் நினைவுகள் கடைமடைக்கு அழைத்துச் சென்று கண் சிமிட்டிக்  கவி பாட வைத்தது முதல்மடை திறந்து மொத்த தண்ணீரையும் வரப்பு மவுழ பெருக்கி மகிழும் முன்னர் மொத்தமாய் முழுநீரும் நின்று போக யாரங்கே என் மடையை அடைத்தது ...

இலக்கியம்

இலக்கியம்  தாலசைத்துத்  தமிழ்ப்பாலூட்டி தாலாட்டிப் பாராட்டி முதல் இலக்கியம் முன்மொழிந்து  பாட்டன் பாட்டி  உறவுமுறை   உணர்வினில் ஏற்றி  தமிழ்ப் பாலூட்டிய தாய்க்குத் தலை வணக்கம்!            சீரமைச் செவிக்கின்பத் தேனருந்த வந்திருக்கும்  தமிழ்ச்  சொந்தங்களுக்கு கோடானு கோடி வணக்கம்          மலையைப் பெயர்த்து  மடிப்பைக்குள் வைக்க நினைப்பதுபோல  காற்றைப் பிடித்து கைப்பைக்குள் அடைக்க விரும்பும் சிறுவன் போல வான் நிலவை நீள்கயிற்றால் இழுத்திட அலையும்  குரங்கினம் போல அலைகடலைச் சிற்றலகால் அள்ளி வற்றிட முனையும்  புள்ளினம்போல இலக்கியப் பெருங்கடல் முன்னர் பேராசை கொண்டு நிற்கின்றேன் வெற்றுச் சொற்களோடு விளையாட்டில்  முந்திட முயல்கின்றேன்              காதல் காதலரோடு மட்டும் கைகோத்துக் கண் சிமிட்டும் ஆன்மீகம்  ஆன்மீகவாதிகளின்  தனியுடைமை எனத்  தனித்து நடை போட்டிடும்  நட்பு வட்ட...

கபிலர் பாடலில் உவமை

கபிலர் பாடலில் உவமை  சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை. அதைக் கதையாகவும் எழுதலாம். கவிதையாகவும் வடிக்கலாம். உவமை நயத்தை அள்ளி அள்ளிக் பருகலாம். விரும்புபவர்க்கு வழங்கி மகிழலாம். ஒரு செய்தியைப் சொல்வதற்காக அவர்கள் கையாளும் உவமைகள் அது நடந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும். அதுதானே ஒரு கதையின் இயல்பு. கவிதையின் இயல்பும் நிகழ்வைக் கண்முன் கொண்டுவந்து  நிற்க வைப்பதாக இருந்தால்.....? ஒரு தலைவனும் தலைவியும் காதல்வயப்பட்டுவிட்டனர். நீயில்லாமல் நானில்லை. நானில்லாமல் நீயில்லை. பிரிந்தால் உயிர் தறியேன் என்று காதல் வசனம் பேசி நாட்களைக் கடத்தினர். எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே காதலித்துக் கொண்டிருப்பது? திருமணம் என்ற பந்தத்தில் இணைந்துகொள்ள வேண்டாமா என்ற நினைப்பு வந்தது. காதலி எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று மெதுவாகக் கேட்க ஆரம்பித்தாள். எதுவரை எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லையோ அதுவரை காதல் இனிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை வந்துவிட்டால்.... ஆயிரம் கேள்விகள் முன் வந்து விடை கேட்டு நிற்கும். இப்போது திருமணம் பற்றிய முதல் கேள்வி தலைவன் முன் வைக்கப்பட்...

நல்லாட்சிக்கு மழையே சாட்சி

நல்லாட்சிக்கு மழையே சாட்சி  அரசர்  ஒருவர் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் நாடு எப்படி இருக்கிறது? நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? நாட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும்  கேட்டுவிட்டுத்தான் தன்  வேலைகளைத் தொடங்குவார். அன்றும் அப்படித்தான்.  அரசவைக்கு வந்தார் மன்னர். அரசவை கூடியது.  "நாடு எப்படி இருக்கிறது ? அமைச்சரிடம் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "மன்னா!வணக்கம். நாடு நன்றாக இருக்கிறது . உங்கள் ஆட்சியில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏது குறை என்று சொல்லிக்கொள்கிறார்கள்?" என்றார். "தாங்களாக கூறுகிறீர்களா? நாட்டு மக்கள் கூறினார்களா?" "நாட்டு மக்கள்தான் கூறினார்கள்." "விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது? மழை பொழிகிறதா?" "அதற்கெல்லாம் குறைச்சல் இல்லை மன்னா...மாதம் மும்மாரி பொழிகிறது" "மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஒரு மாறி...  உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன மும்மாரி? "என்று கேட்டார் மன்னர். மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை ...

தந்தை தாய்ப் பேண்

தந்தை தாய்ப் பேண்  "தந்தை தாய்ப் பேண் " அனைவருக்கும் பிடித்தமான  ஆத்தி சூடி பாடல் வரிகள். அடிக்கடி பலர் வாய்களில் வந்து போகும் வரிகள். பெற்றோரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் வரிகள். பெற்றோரைப் பேணி பாதுகாத்துக் கொள் என்று நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் வரிகள். உன் பெற்றோரை பார்த்துக்கொள் என்று வேறு யாராவது நினைவுபடுத்த வேண்டுமா என்ன? "மறந்தால்தானே  நினைப்பதற்கு.. உன்னை நெஞ்சிலேயே வைத்திருக்கிறேன் " என்று காதலியிடம் வசனம் பேசுவான் காதலன். ஆமாங்க...மறந்தால்தானே நினைவூட்டல் வேண்டும். காதலியை நெஞ்சில் வைத்திருக்கும் நாம்   மனைவியை குழந்தைகளை நெஞ்சிலே சுமக்கும் நாம் பெற்றோரை நெஞ்சில் சுமக்கமாட்டோமா‌ என்ன? சுமப்பது இருக்கட்டும். குறைந்தபட்சம் நினைவிலாவது வைக்கலாமா இருப்போம். நாம்தான் பெற்றோரை மறக்கவில்லையே... பிறகு எதற்கு இந்த நினைவூட்டல் என்கிறீர்களா....? நினைவில் வைத்திருப்பவர்களுக்கு நினைவூட்டல் தேவை இல்லை. மறந்தவர்களுக்கு ...நினைவூட்டல் தேவை அல்லவா.? அதனால் தான் "தந்தை தாய்ப் பேண் " என்று நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார் ஔவை. வயது முதிர்ந்தாலே பெற்றோர் ...

கண்டாங்கி

Image
கண்டாங்கி  கண்டாங்கி  கண்டாங்கி         என்னைக் கட்டி இழுத்த                  என்றன் அ ம்மா                       கண்டாங்கி                           தொட்டில்  கட்டி                          துயில  வைக்க                                 துணைக்கு வந்த                            ...

கருப்பும் கறுப்பும்

கறுப்பும் கருப்பும்  ஏல....ஏ...சின்னவள அந்த கருப்பி அக்கா கடையில போயி ஒரு தேங்காய் சில்லு வாங்கிட்டு வா" "நான் கருப்பி கடைக்கும் போகல்ல...சிகப்பி கடைக்கும் போகல....போம்மா" சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து ஓடிவிட்டாள் பரணி. "எம்மோ அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தியளா? கருப்பி....சிகப்பி... நல்லா இருக்குல்ல..." என்று சொல்லி சிரித்தாள் அக்கா. இதுவரை  கருப்பி என்று சொன்னோமா?  கறுப்பி என்று சொன்னோமா?  குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அதே குழப்பம்தான். நீங்கள் இதுவரை உச்சரித்து வந்தது கருப்பி என்பதுதான். வல்லின றகரம் போட்டு சொன்னீர்களா இல்லை இடையின ரகரம் போட்டு சொன்னீர்களா என்பது உச்சரிக்கும் போதே புரிந்திருக்கும். புரியவில்லை என்றால்  யரவவழள கசடதபற உச்சரிப்பு வேறுபாட்டை கவனித்துப் பாருங்கள். கருப்பியா? கறுப்பியா? என்பது புரியும். நாமும் இந்த கருப்பி ,சிகப்பி என்ற வார்த்தைகளை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம். இப்படி உச்சரித்து எழுத்து வேறுபாட்டைக் கவனித்ததில்லையே என்று தோன்றுகிறதா?  சரி போகட்டும். விட்டுவிடுங்கள். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இப்படிப்ப...

தமிழால் இணைவோம்

" இமிழ் கடல் சூழ் உலகெங்கும் போய் வாழ்ந்தாலும் எந்தமிழர் தமிழ் மொழியால் இணைந்து கொள்க" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். கண்டம்தாண்டி கண்டம் வந்தாலும் மொழியால் ஒன்றுபடுவீராக என்பது பாவலரேறு அவர்களின் வேண்டுகோள். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள்  இல்லா நாடுகளே இல்லை என்னும்  அளவுக்கு உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் தமிழர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்வைத்தேடி ... வாழ்வாதாரத்தைத் தேடி உலகெங்கும் பணத்திற்காக பதவிக்காக குடியமர்ந்து விட்டோம். பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  இருக்கவும் முடியாது. . வீட்டை மறந்து  நாட்டைத் துறந்து அந்நிய தேசத்தில் வந்து குடியமர்ந்து விட்டோம். அழகான அந்நியமொழியோடு நம்மைப் பிணைத்துக்கொண்டு விட்டோம். ஆனால் தாய்மொழியை மட்டும் நாம் மறந்திலோம் என்பதை அங்கங்கே காணப்படும் தமிழ்ச் சங்கங்கள் நமக்கு  நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.  தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்காரர் என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால் தமிழ்க் குரல் ஒன்று கேட்டுவிட்டால் போதும். திரும்பிப் பார்க்கிறோம். அனிச்சை செயலா...

விதியின் பயனே பயன்

விதியின் பயனே பயன்  ஏகன் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தான்.அவனுக்கு வள்ளி என்று ஓர் அருமையான  மனைவி வாய்த்திருந்தாள். வாய்க்கு ருசியாக வகைவகையாக உணவு சமைத்துக் கொடுப்பாள். ஏகன் வயலிலிருந்து வருவதற்கு முன்னர் சமைத்து வைத்துவிட்டு வீட்டுத் திண்ணையிலேயே ஏகன் வருகைக்காகக் காத்திருப்பாள். ஒருநாள் ஏகன் வரகு சோறு சமைத்து வைக்கும்படி சொல்லி விட்டுச் சென்றான். வள்ளியும் ஏகன் சொல்லியது போல வரகு சோறும் கறியும் சமைத்தாள். சமையல் முடிந்ததும் ருசி பார்ப்பதற்காக சிறிது வரகு சோறும் கறியும் ஊற்றி சாப்பிட்டுப் பார்த்தாள். அடடா....என்ன பிரமாதம்! என்றுமில்லாத படி இன்று உணவு இவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்று மறுபடியும் எடுத்து சாப்பிட்டாள். இன்னும் ஆசை தீர்ந்தபாடில்லை. உணவின் சுவை இன்னும் கொஞ்சம் சாப்பிடு...இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சுண்டி இழுத்தது. அந்த ஈர்ப்பில் மறுபடியும் மறுபடியும் சாப்பிட்டு பானையில் இருந்த மொத்த சோற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் வள்ளி. உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டல்லவா? வள்ளியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? அப்படியே தூங்கிவிட்டாள் ...

திருநெல்வேலியில் ஏல

திருநெல்வேலியில் ஏல  திருநெல்வேலி என்றாலே அல்வா. அதுவும் இருட்டுக்கடை அல்லாவுக்கு அடிமைப்பட்டுக் போன நாக்கு வேறு எந்த அல்வாவையும் ருசி பார்க்காது. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீருக்குக்கூட தனி ருசி உண்டு. நெல்லை மக்கள்  பேச்சில் இனிமை இருக்கும். மரியாதையோடு பேசும் பண்பு உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் தனி அடையாளம் இருக்கும். பேசும் பேச்சிலிருந்து இது எந்த வட்டார வழக்குச் சொற்கள் என்பதைச் சொல்லிவிடலாம். பேரைச் சொல்லாமலேயே ஊரைக் கண்டுபிடித்துவிடலாம். திருநெல்வேலி என்றதும் 'ஏல' என்ற சொல் உள்ளேன் ஐயா என்று முந்தி வந்து தலை தூக்கி நிற்கும் அண்மை காலமாக நம் காதுகளில் அடிக்கடி வந்து விழும் ஒரு சொல் 'ஏல ' என்பதுதான். ஏல...போல...வால.... இது எல்லாமே எங்கள் பகுதியில் பேசப்படும் சொற்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்த ஏல...ஏல...என்பது மட்டும் தொலைக்காட்சியில்  அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லாகிவிட்டது. திரைப்படங்களால் இந்தச் சொல் தனிக்கவனம் பெற்று வருகிறது. இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் உண்மையிலேயே அந்தச் சொல் உண்மையான பொருளில் சொல்லப் படுகிறதா...? அல்லது திசைமாறிப் போகிறதா ?என்று  யோசித்துப் ப...

சாண் ஏறினால் முழம் சறுக்குமா

சாண் ஏறினால் முழம் சறுக்குமா சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நம்ம பொழப்பே இப்படித்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் என்று முன்னேறுவது? என்று சலிப்பாக இருக்கிறீர்களா? ஏன் இந்த சலிப்பு? சாண் ஏறி முழம் சறுக்கினால் வெற்றி பெற முடியாது என்று யார் சொன்னது?  முதலாவது சொலவடையை சற்று மாற்றிப் பாருங்கள். நீங்கள் வெற்றி பெறப் போவது உறுதி.  ஓணான் ஒன்று எத்தனைமுறை சறுக்கினாலும் நான் பனை மரத்தில் ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து ஏறிக்கொண்டிருந்து. அதைப் பார்த்த ஒரு குரங்கு" அட முட்டாள் ஓணானே! எதற்காக சொரசொரப்பாக இருக்கும் பனை மரத்தில் ஏறி இவ்வளவு கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கிறாய்? இப்படி வழுக்கி வழுக்கி ஏறி என்றுதான் பனை மரத்து உச்சியைப் போய் சென்றடைவாய் "என்று கிண்டலடித்தது. தலையை நிமிர்த்தி பார்த்த ஓணான்"அட...நீ போவியா எனக்கு எல்லாம் தெரியும் "என்று சொல்லியபடி மறுபடியும் மறுபடியும்  பனை மரத்தில் ஏறியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புலவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். அவர் மனதில் இப்போது வேறு ஒரு மனக்கணக்கு ஓடியது.  அவர் மனதிற்குள் ஓடிய கணக்கு பாடலாக வெளி வந்தது. பா...

மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது

மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது கொண்டாட்டங்களும் குதுகலமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பிறந்த நாளில் நாலுபேர்  வாழ்த்திவிட்டால் அதில் மனம் மகிழ்ச்சியடைகிறது. விரும்பிய உணவுப் பொருளை வாங்கி உண்டுவிட்டால் .... கையை மணத்துப் பார்த்து பார்த்து மகிழ்கிறோம். உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் விழுந்து விழுந்து உபசரித்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். தேர்வில் வெற்றிபெற்று விட்டால்... ஏதோ இமாலய சாதனை படைத்துவிட்டது போன்று துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும் ஊரில் மூன்று குடம் தண்ணீர்  கிடைத்துவிட்டால்.... அதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறோம். புது சட்டை அணிந்துவிட்டால்.... நாள்முழுவதும் ஏதோ ஒரு மகிழ்ச்சி வந்து தொற்றிக்கொண்டு  ஆகாயத்தில் மிதப்பது போன்று உணர்கிறோம். புதிதாக குளிர்சாதனப்பெட்டி வாங்கிவிட்டால்.... திறந்து திறந்து பார்த்து காற்றைத் குடித்து  மகிழ்கிறோம். நாலு கிரவுண்ட் நிலம் வாங்கிவிட்டால்... வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய சாதனை புரிந்துவிட்டது போல நிலத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறோம். வாடகைவீட்டில் வாழ்ந்...