பிழையின்றி எழுதுவோம்
பிழையின்றி எழுதுவோம் " சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் " ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் அவ்வாறு செய்யலாம் என்று சொல்வது எல்லோர்க்கும் எளிது. ஆனால் சொல்லிய வண்ணம் செய்து முடித்தல் அரிது என்கிறார் திருவள்ளுவர். இப்படி எழுதலாம் ...அப்படி எழுதலாம் ... என்று ஆயிரம் அறிவுரை கூறலாம். ஆனால் எழுதும்போது நாம் படும்பாடு. அங்கும் இங்கும் இடிக்கும். வல்லின 'ற 'போட வேண்டுமா? இடையின 'ர 'போட வேண்டுமா? என்று தெரியாமல் எதையாவது ஒன்றைப் போட்டு பொருள் தலைகீழாக பொருள் மாறும்படியாக எழுதி அனுப்பி அவமானப்பட்டிருப்போம். இரண்டு சுழி 'ன'கரமும் மூன்று சுழி 'ண'கரமும் படுத்தும்பாடு அப்பப்பா..... இன்று வரை துரத்திக்கொண்டுதான் இருக்கிறது என்பது குறுஞ்செய்திகளை வாசிக்கும்போது புரிகிறது. இப்படி பல சொற்கள் பல நேரங்களில் நம்மை பாடாய்ப் படுத்தியதுண்டு. அடித்துத் திருத்தி திருத்தி முடிவாக... எதுவாகவும் இருந்துட்டு போகட்டும் ...