செல்லதாயி
செல்லதாயி "ராசா...ராசா ராசா வந்திருக்காரா? " வருகை பதிவேட்டிலிருந்து கண்களை எடுக்காமலே கேட்டார் சூப்ரவைசர் செல்வி. "இதோ இருக்கேம்மா." தட்டுத் தடுமாறி எழும்பினார் ராசா. "வாங்க வந்து கையெழுத்துப் போடுங்க" அவசரப்படுத்தினார் செல்வி. "வாங்க ...வாங்க. எல்லோரும் வரிசையாக வந்து கையெழுத்துப் போடுங்க." செல்வி சொல்லியதுதான் தாமதம் அனைவரும் வரிசையாக வந்து நின்றனர். ஒருவர் கையெழுத்துப் போடுவதும் இன்னொருவர் கைரேகை பதிவு செய்வதும் என்று முண்டியடித்து வேலை விறுவிறுப்பாக நடந்ததுகொண்டிருந்தது. " எல்லாரும் கையெழுத்துப் போட்டாச்சா? யாரும் பாக்கி இருக்கா ?" கேட்டபடியே பதிவேட்டை ஆய்வு செய்தார் செல்வி. " செல்லதாயி....செல்லதாயி செல்லதாயி வரலியா?" கூட்டத்தில் செல்லதாயியைத் ...