கன்னா பின்னா
கன்னா பின்னா எனக்கொரு ஆசை. எப்படியாவது கவிதை எழுதி அரசரிமிருந்து பரிசு வாங்கிவிட வேண்டும். அதனை நாலு பேரிடம் காட்டி எனக்கும் கவிதை எழுத வரும் என்று சொல்லி பெருமைப்பட வேண்டும். அனைவரும் மெச்ச வேண்டும். நாலு காசு சம்பாதிக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா? தமிழில் நாலு நல்ல சொற்கள் சரியாக எழுதத் தெரியாத எனக்கு கவிதை எழுத ஆசை வரலாமா? கூடாது....கூடாது எனக்கு வரக் கூடவே கூடாது. "கூடாது ...கூடாது என்று குந்தி இருந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடுமா? நாளைய சோற்றுக்கே வழியில்லையே... உனக்கெல்லாம் குடும்பம் எதற்கு? குந்திக் தின்ன நாலு காசு தேடி வைத்திருக்கிறீரா? இல்லை... தோட்டம் துறவு என்று வாங்கித்தான் போட்டுருக்கிறீரா? நாளையப் பாட்டுக்கு உலை வைக்க ஆழாக்கு அரிசி இல்லை. புலவன் புலவன் என்று சொல்லி விட்டுத் திரிந்தால் போதாது. எங்கேயாவது போய் பாடி வயித்துப் பாட்டுக்கு ஏதாவது கிடைக்குமா என்று பாரும்." நேற்று மனைவி திட்டியது மறுபடியும் மறுபடியும் தீட்டிய கூராயுதமாக நெஞ்சில் வந்து தைத்துப் போனது. "எல்லோரும் பாடிப் பரிசுகளை அள்ளி...