வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பொய் சொன்ன வாய்க்கும் போஜனம் கிடைக்காது என்பார்கள். பொய் சொன்னால் சாப்பாடு கிடைக்காது. பொய் சொன்னால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். ஆதலால் உண்மை பேசுக என்று பெரியோர் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஏன் உண்மை பேச வேண்டும்? அதற்குப் பதிலாக வள்ளுவர் "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை என்னைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற" வாய்மையைத் தவிர வேறெதுவும் நன்மை பயக்கக் கூடியது அல்ல என்று வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். இப்படியொரு பெருமையோடு நிமிர்ந்து பார்க்க, "பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் " என்ற குறள் கண் முன்னர் வந்து நின்று பொய்க்கு பரிந்துரை வழங்குகிறது. "என்ன பொய் சொல்லலாமா?" என்று நாமும் திருப்பி கேட்க "ஆமாம் ...பொய் சொல்லலாம். நாம் சொல்லும் பொய்யால் ஒருவர்க்கு நன்மை பயக்குமானால் மட்டும் பொய் சொல்லலாம்" என்று ஒரு நிபந்தனையோடு பொய் சொல்ல ஒப்புதல் அளித்து விட்டார் வள்ளுவர். அதனால் வள்ளுவரே அனுமதி அளித்து விட்டார் என்று பொய் சொன்னவர்கள் நல்லதுக்குத்தானே பொய் சொன்னேன் என்று...