விசும்பின் துளிவீழின் அல்லால்....
விசும்பின் துளிவீழின் அல்லால்.... விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலை காண்ப தரிது " குறள் : 16 விசும்பின் _ வானத்தின் துளி _ மழைத்துளி வீழின் _ விழுந்தால் அல்லால் _ அன்றி மற்று _ அதன் பின்னர் ஆங்கே _ அவ்விடத்தே பசும்புல் _ பசுமையான புல் தலை _ புல்லின் நுனி காண்பது _ காணல் அரிது _ அருமையானது, காணமுடியாது வானத்திலிருந்து மழைத்துளி விழவில்லை என்றால் அவ்விடத்து ஒரு பச்சைப்புல் நுனியைக்கூட காண்பது அரிதாகிவிடும். விளக்கம் : மழைத்துளி நிலத்தில் விழாவிட்டால் அவ்விடத்தில் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான நீர் இல்லாமல் போய்விடும். புல் பூண்டு முளைப்பது அரிதாகிவிடும். புல் பூண்டே முளைக்காதபோது மனிதன் வாழ்வது எப்படி? மனித வாழ்க்கைக்குத் தேவையான உணவு கிடைப்பது எப்படி? மழை இல்லை என்றால் உணவு இல்லை. உணவு இல்லை என்றால் உயிர் இல்லை. உயிரினங்கள் அனைத்து...