கடன் சொல்லும் சேதி
கடன் சொல்லும் சேதி அதிகாலை 6. 30 மணி. வாசலில் பத்திரிகை வந்து விழுகிறது. எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் என் கண்கள்அப்படியே நிலைகுத்திப் போனது. காரணம் வாழ வேண்டிய வயதில் இரண்டு குழந்தைகள். ஆயிரம் கனவுகளோடு பதினேழு வருடம் கூடவே வாழ்ந்த மனைவி. மூவரின் படம். மூவரையும் கொன்றுவிட்டு கணவன் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது செய்தி. பதினாறு வயது மகன். இன்னும் ஐந்தாறு வருடத்தில் தன் காலில் நின்று விடுவான். பதின்மூன்று வயது மகள். பலபல கற்பனைகள் வந்து கீச்சுமூச்சு காட்டும் பருவம். வாழ்க்கையில் பாதிகாலம்கூட கடந்திராத மனைவி. பிள்ளைகளை எப்படியெல்லாம் வைக்க வேண்டும் என்று ஓராயிரம் கனவுகளோடு இருந்தவர். கணவன்மீது உள்ள அசையா நம்பிக்கையில் ஏன் ?எதற்கு ? என்ற எந்தக் கேள்வியுமே கேட்காது உடன் நடந்தவர். இவர்களைக் கொல்ல இவருக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி கேட்க வைக்கும் முகங்கள். தான் மட்டும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும...