நத்தம்போல் கேடும்....
நத்தம்போல் கேடும் உளதாகும் " நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது" குறள்: 235 நத்தம் - ஆக்கம் போல்- போன்ற தேடும் - அழிவும் உளதாகும் - உள்ளதாகின்ற சாக்காடும் - இறப்பும் வித்தகர்க்கு- ஆற்றல் மிக்கவர்க்கு அல்லால் -அன்றி அரிது - கடினமானது துன்பத்திலும் அவற்றைத் தாங்கி தன்னை வளர்த்துக் கொள்வதும் சாவிலும் தன் புகழை நிலை நாட்டுவதும் ஆற்றல்மிக்கவர்களால் மட்டுமே ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். விளக்கம் : எவ்வளவு துன்பம் வந்தாலும் துவண்டு போகாதவர்கள் உண்டு. நாலாபக்கங்களிலிருந்தும் தீமை செய்பவர் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் ஒரு புன்னகையால் கடந்து செல்லும் மன தைரியம் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். இந்த மன தைரியமும் புரிதலும் ஒருவரை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். வாழும்போது கேடு வந்தபோதிலும் தமது உழைப்பால் புகழ் ஈட்டி இறந்தபோதும் இறவாப் புகழ் எய்தும் திறன் அறிவுடையவர்கு மட்டுமே வாய்க்கும். மற்றவர்க்கு வாய்த்தல் அரிதினும் அரிது. புகழ் எளிதில் ஈட்டிவிட முடியுமா?...