Posts

Showing posts with the label மாலைமாற்று என்றால் என்ன-கவி வகை

மாலைமாற்று என்றால் என்ன

மாலை மாற்று என்றால் என்ன  சித்திரக் கவி வகைகளுள் ஒன்று மாலை மாற்று எனப்படும் ."மாலை மாற்று" என்பது, ஒரு பாடல் அல்லது சொற்றொடரை முன்புறமாகப் படித்தாலும் பின்புறமாகப் படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு வகைச் சொல்விளையாட்டு ஆகும். இதனைத் தமிழில் "இருவழியொக்கும் சொல்" என்றும் கூறுவர். மாலை மாற்று இலக்கணம்: " ஒருசெயுண் முதலீ றுரைக்கினு மஃதாய் வருவதை மாலை மாற்றென மொழிப" என்று மாலை மாற்றுக்கு இலக்கணம் கூறுகிறது மாறனலங்காரம் என்ற இலக்கண நூல். மாலையைப் போல் முதலிருந்து துவங்கி இறுதிவரை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் வரிசை மாறாமல் ஒன்று போன்றே இருப்பது மாலை மாற்று " இறுதி முதலாக வெடுத்து வாசிப்பினு மதுவே யாவது மாலை மாற்றாகும்” - என்கிறது முத்துவீரியம் என்ற இலக்கண நூல். பொதுவாக ‘மாலை மாற்று’ குறள் வெண்பாவால் இரண்டு அடிகளிலேயே பாடப்படும். திருஞானசம்பந்தர் பாடல் ஒன்று மாலை மாற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா" -  திருஞான சம்பந்தர் இதனை முதலிருந்து தொடங்கி வாசித்தாலு...