அம்மா பிள்ளை
அம்மா பிள்ளை நான் கேட்டுகிட்டே இருக்கிறேன். நீ பதிலே சொல்ல மாட்டேங்குற..." உரக்கக் கத்தினார் அம்மா. திரும்பிப் பார்த்துச் சிரித்தான் பார்த்திபன். இந்த அம்மாவே இப்படித்தான். திடீரென்று இப்படித்தான் உரக்கக் கத்துவாங்க. அம்மாவை எப்படி ஆப் பண்ண வேண்டும் என்று பார்த்திபனுக்குத் தெரியும். அதனால்தான் இந்த நமட்டுச் சிரிப்பு. "இது என்ன சிரிப்பு....? நான் கேட்பது உனக்குச் சிரிப்பா இருக்கு இல்ல..." கோபமாகக் கேட்டார் அம்மா. வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தபடி திரும்பி நின்று கொண்டான் பார்த்திபன். "திரும்பி நின்னுகிட்டா..... கேட்கமாட்டேனா? இப்போ நீ என்னதான் சொல்லப் போற?" தோளைப் பிடித்து உலுக்கித் திருப்பியபடி கேட்டார் அம்மா. "உனக்கு இப்போ என்ன வேணுங்குற...?" "ஒரு பத்து பவுனு நகை வேணுங்கிறேன்." "அட ....எங்க அம்மாவுக்குக்கூட ஜோக் அடிக்க தெரியுது பாருங்க" "உன்னை அடிக்காம வளர்த்துட்டேன் பாரு. நீ இதுவும் சொல்லுவா இதுக்கு மேலேயும் சொல்லுவா." "வாங்க...வாங்க அடியுங்க... நல்ல அடியுங்க.. உங்க கை வலிக்கும் வரை அடியுங்க..." "பேச்ச...