செய்வன திருந்தச் செய்
செய்வன திருந்தச் செய் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணியாயிற்று என்றால் அதனை சரியாக செய்து முடித்துவிட வேண்டும். இங்கத்தொட்டேன் அங்க தொட்டேன் என்று அரைகுறையாகச் செய்யக் கூடாது. அப்படி ஒரு செயலில் உங்களால் முழுமையாக ஈடுபட முடியாதா.. பரவாயில்லை. ... தொடங்காமலேயே விட்டுவிடுங்கள். அவசரப்படுவதாலோ பதறுவதாலோ நமக்கு வெற்றி கிட்டப் போவதில்லை. " எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு " என்றார் வள்ளுவர். தொடங்கும் முன் அதைப் பற்றிய ஆராய்ச்சி தேவை. தொடங்கிய பின்னர் அதை எப்படி நல்லமுறையில் முடிப்பது என்பதில்தான் முழு கவனமும் இருக்க வேண்டும். வாழ்வில் நல்ல வகையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஒருபோதும் செயலைத் தொடங்கும்போது இருந்த ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து அதே ஆர்வத்தோடு செயல்படும்போதுதான் நாம் தொடங்கிய செயல் நல்லமுறையில் முடிவு பெறும். ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவர் மட்பாண்டம் வனையும்...