தாழ்வுமனப்பான்மை வேண்டாம்
தாழ்வுமனப்பான்மை வேண்டாம் " தாழ்வு இழிவல்ல. தாழ்ந்தே கிடப்பதுதான் இழிவு." உங்களால் நன்றாக படிக்க முடியவில்லையா.... நான் அழகாக இல்லையே என்று வருத்தமா.... என்னால் ஜெயிக்கவே முடியவில்லையே என்று கவலையா ..... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்ற புலம்பலா.... என்னை மட்டும் யாருக்குமே பிடிக்கமாட்டேங்குதே என்ற அங்கலாய்ப்பா.... அட போங்கங்க... இதெல்லாம் பெரிய காரியமே இல்ல... தூக்கி ஒரு ஓரமா போட்டுவிட்டு போய்கிட்டே இருங்க. " அட ....போங்கங்க...நீங்கபாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விடுவீங்க.. அவமானப்பட்ட எங்களுக்கு அல்லவா அதன் வலி தெரியும்" என்ற விசும்பல் கேட்கிறது. வலியையும் அவமானங்களையும் தாண்டி வந்ததால்தான் இத்தனை துணிச்சலாக உங்களிடம் பேச முடிகிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லங்க.. நாங்களெல்லாம் கடந்து வந்த பாதைகள் எவ்வளவு கரடுமுரடானவை என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். கடக்கும்வரை சற்று கடினமாகதான் இருக்கும். தாழ்வு மனப்பான்மை என்ற கவசத்தை அண...