Posts

Showing posts from June, 2024

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி: ஜூலியட் ராஜன்                    ஆசிரியை                    கே. சி. மாதுங்கா தமிழ்ப்பள்ளி                     மும்பை- 19 நாள் :29.06.2024 கத்தும் கடல் கடந்த புகழாறு கன்னிமாதா கருணைக்கு நிகர் யாரு பண்டாரகுளம் சந்தானமரியான் ராஜம்மாள் தேனூர செவியோதி வைத்தார் ஜூலியட்  என்ற நற்பேரு ! களிகை ராஜனோடு இணைந்த இந்தத் துணையாறு இராஜாங்கம் நடத்திப் பெற்றதிரு பொன்னாறு அகவை இவருக்கு என்றும் பதினாறு - அதுதான்  ஆண்டவன் கட்டளை அதற்கு மறுப்பேது? ஆர் எஸ் நகரில் சிற்றடி பதித்த சிற்றாறு ஆரேகாலனி கே.டி காய்க்வாட்  எங்கும் தெண்ணீராறு ஐயாறு ஆண்டுகள் மாதுங்காவில் நிறைவான வரலாறு ஐயமில்லை  இவர் மாநகராட்சித் தமிழ்ப்பேராறு! கற்பித்தலில் புதுமை அள்ளிவரும் புத்தாறு கற்பவர்க...

இல்லாள் அகத்திருக்க இல்லாதது உண்டோ

இல்லாள் அகத்திருக்க... அனைவருக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக  இருக்கும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு வேண்டும் என்று ஆசை. வீடு கிடைத்துவிட்டால் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் இருந்திடல் வேண்டும் என்று ஆசை. தென்னை மரங்கள் இருந்துவிட்டால் போதுமா?  அதில் குலைக்குலையாக இளநீர் காய்த்துத் தொங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதுவும் நடந்துவிட்டது. இப்போது முற்றத்தில் முத்துச் சுடரொளி பரப்பி நிலவு  வந்து எட்டிப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை. இரவினில் நிலவு வந்து போயிற்று. இனி அதிகாலையில் குயில்கள் கூடி வந்து கத்திச் செல்ல வேண்டும் என்று ஆசை. குயில்கள் கத்தினால் மட்டும் போதுமா? கூடவே பூந்தென்றல் காற்று வர வேண்டாமா? தென்றல் வந்து காதோடு கவிபாடிச் செல்ல  வேண்டும் என்று ஆசை. இத்தனை ரம்மியமான சூழலில் அழகானவீடு இருந்தால் மட்டும் போதுமா?  இல்லத்தில் இருந்து ஆட்சி செய்ய ஒரு பத்தினிப் பெண் வேண்டாமா? அவள் இல்லாமலா?  இல்லம் என்று இருந்தால் அதில் இல்லாள் இருந்தால்தானே மகிழ்ச்சி. இப்படி ஒரு ஆசை யாருக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். நம்ம பாரதிய...

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து  நல்வழி ஔவையாரால் பாடப்பட்ட  நீதி நூல். மக்களை நல்வழிப்படுத்த அக்கால புலவர்கள் மெனக்கெட்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ நமக்குப் பாட வருகிறது பாடிவிட்டுப் போவோமே என்று கடமைக்காக ஏனோதானோவென்று எழுதப்பட்டவை அல்ல. பார்த்துப் பார்த்து  செதுக்கி வடிவமைக்கப்பட்டவை. மனங்களைப் பண்படுத்த உலக எதார்த்தத்தைச் சொல்லித் தர விழிப்புணர்வு ஏற்படுத்த எச்சரிக்கை செய்து கவனமாக இருக்க வைக்க நம் புலவர்களைத் தவிர கரிசனம் மிக்க இன்னொருவர் உலகில் இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஒருவரா இருவரா அனைத்துப் புலவர்கள் எழுதிய பாடல்களும் ஏதோ ஒரு வகையில் நம் மனதிற்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. நம்மை நல்வழிப் படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. அருமையான நூல்களைப் படைத்த புலவர்கள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஔவையார் என்றால் மிகையாகாது. ஔவை எழுதிய ஆத்திசூடியைப் படிக்காமல் யாரும் அரிச்சுவடு கற்றிருக்க முடியாது. அதுபோல ஔவையார் நீதிநூல்களைக் கற்றிடாமல் கடந்திட முடியுமா? கற்றவர் என்று சொல்லிடத்தான் முடியுமா?  உங்களுக்காக ஔவையின் நல்வழி பாடல்களிலிருந்து நா...

அன்புள்ளவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி

அன்புள்ளவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி ? எதற்கெடுத்தாலும் நான் அன்பானவன்  நான் அன்பானவள் என்று சொல்கிறவர்களைப் பார்த்து ...நிஜமாகவா ? என்ற ஒரு சொல்லை மட்டும் கேட்டுப் பாருங்கள். அப்போது  அவர்கள் முகம் ஒருமாதிரியாக  மாறும் பாருங்க ...அதன் பிறகு ஒருபோதும் அவனோ ..அவளோ அந்தச் சொல்லை உங்களிடம் சொல்லமாட்டார்கள். ஏய்....சந்தேகப்பட்டுட்டாம்பா. இவனிடம் கொஞ்சம் உஷாராக இருக்கணும் என்று ஒதுங்கிப்  போய்விடுவார்கள். என்மீது நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை உங்கள் நண்பனிடமோ நண்பியிடமோ கேட்டுப் பார்த்து நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 99 விழுக்காடு இதுதாங்க உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒரு விழுக்காடு விதிவிலக்கு மனிதர்கள் இருப்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம். அன்பு...அன்பு..அன்பு என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பக்கம் திரும்புவோம். அன்பு வாயால் பேசுவதோடு நில்லாது. செயலில் அதை உறுதி செய்யும். செயலில் ஒன்றுமே இல்லையா?  அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் ஒருவர் அன்பானவர்  என்பதை எப்படித்தான்  கண்டு கொள்வது...

என் அப்பா

    என் அப்பா முந்நூறு நாள் சுமந்து முழு உருவம் தந்து  தாலசைத்துத்  தமிழ்ப் பாலூட்டி   எ ட்ட நிற்கும் நிலவினை   கட்டி இழுத்து வந்து   கட்டில் அருகில் வைத்து   கதைகள் பல பேசி   காதோடு உறவுகூறி   கன்னம் உரசி   கன்னல் மொழி கூறி   கலையாத கவினோடு   நிறைந்த உணர்வோடு   நம்மில் கலந்திருப்பவர்  அம்மா . அம்மாவின் முதல் அறிமுகம்   என் அப்பா பெண்  எந்தன் குரல் கேட்டு அப்பாவும் முகம் சுழித்து முத்தாய்ப்பாய் யாத்திரைக்கு நேர்த்தியாய்    வழி ஒன்று சொல்ல.... அடங்காத நானும் ஓயா குரல் குரலெழுப்பி உறங்கவிடாது ஊறு செய்ய  தாங்காது இனி என்றெண்ணி குரல் நிறுத்தம் செய்ய  காந்தியார் வழியில் ஆட்டுப்பால் அருந்திட வைத்து என் இறுதி யாத்திரைக்குத் தற்காலிக தடையிட்டவர் அப்பா  அந்திப்பொழுதினிலும் அரசியல் அரட்டையில் பங்கு கொள்ளவரும் பெரியோர் முன்னிலையில் தந்தியின் உலக அரசியலை உரக்க உச்சரிக்க வைத்து வாசிப்புப் பயிற்சிக்கு வாய்க்கால் அமைத்துத்  தந்தவர் அப்பா! வெள்ளந்திய...

மடல் பெரிது...

மடல் பெரிது.... ஒரு பொருளின் தரம் என்பது அதன் உருவத்தைப் பொருத்ததல்ல. அதன்  பயன்பாடு மற்றும் செயல்பாடு  இவற்றை வைத்துதான்   அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படும்.  யாரையும் உருவத்தைப் பார்த்து  மதிப்பீடு செய்ய வேண்டாம். அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து மதிப்பீடு செய்யுங்கள் இதைத்தான் வள்ளுவரும் "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு  அச்சாணி அன்னார் உடைத்து" என்று சொல்லியிருப்பார். உருவம் சிறிதாக இருக்கும் அச்சாணி கூட பெரிய தேர் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் திறன் கொண்டது. அதுபோல உருவம் சிறிதாக இருக்கும் மனிதர்களும் பெரிய காரியங்களைச் செய்யும் திறன் பெற்றவர்களாக இருப்பர். "சிறு துரும்பும் பல் குத்த உதவும் " என்ற பழமொழியும் இதைத்தான் சொல்லிச் செல்கிறது. எங்கே? யார் ?எப்படி இருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவருடைய செயல்பாடு எத்தனைபேர் பயன்படும்படி அமைந்துள்ளது. எந்த நேரத்தில் அவர் பயனுள்ளவராக  இருந்தார் என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைத்தான் ஔவையும், மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது...

போராளியோ பேராழியோ

போராளியோ பேராழியோ  போராளியோ  பெரும்பேராழியோ விளங்கிட முடியா வேதம்தான் பெண்ணோ! இளநகை புரிந்து  இன்முகம் காட்டியவளைப் பேதை என்றது முத்தமிழோ! சிறகுகள் முளைத்துச் சிட்டாய்ப் பறந்து  செவிமடல் திறந்து செம்மையை அறிந்து கேள்விக் கணைகள் தொடுத்து கர்வம் தொலைத்தவளைப் பெதும்பை  என்றது நற்றமிழோ! மாசிமாதத் தென்றலாய்  மாலை நேரத் தென்றலாய்  மயங்கிட வைத்து மனமதைத் துவைத்து மடவரலானவளை மங்கையென அழைத்தது வண்டமிழோ! உள்ளதை உரைத்து உவப்பினில் திளைத்து உன்மத்தம் கொண்டு ஊமைமொழி பேசி உள்ளம் கவர்ந்தவளை  மடந்தையென உரைத்தது தீந்தமிழோ! இமையாய் இருந்து இதயத்தில் சுமந்து இனிமையைத் தந்து இல்லம் மகிழ இளம்பிடியானவளை அரிவை என்றது அருந்தமிழோ! உள்ளங் கையில் உறவினைச்  சுமந்து உலகினை அறிந்து உழைப்பினைத் தந்து உண்மையை உரைத்து உயர்யானவளை தெரிவை  என்றது தண்டமிழோ! பேராளுமையோடு  வீட்டாளுமை செய்து நாட்டாமையாய்  நற்கடனாற்றி நற்பணி முடித்து நன்மகளானவளை பேரிளம் பெண் என்றது பைந்தமிழோ! இத்துணைப் பெயர்கள்  தந்தவர் எவரோ? எப்படி இப்படி என்ற வியப்புதான் நினதோ போராளியோ பெரும்பே...

சும்மா

சும்மா என்ன பாலாமணி அக்கா... வேலை எல்லாம் முடிந்துட்டுதா... சும்மா இருந்தாப்ல இருக்கு... "உனக்கு என்ன மகராசி நீ சும்மா  இருப்பதற்கு என்றே கொடுத்து வைத்தவள்" " ஏன் உனக்கு என்னாயிற்று...  நீயும் சும்மாதானே இருக்கிறாய் ." "சும்மாவா...ஒருமணி நேரம் இந்த வீட்டுல  சும்மா இருக்க விட்டுருவாகளா என்ன " "சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா... அதுக்குப்போய் ....ஆமா.. உங்க அத்தை சும்மா இருக்காங்களா? " "அவுங்களுக்கென்ன ...சும்மா தின்னுட்டு தின்னுட்டு...சும்மா இருக்க முடியாமல் ஊர்வம்பு  இழுத்துக்கிட்டு இருப்பாங்க..." "நீ சும்மா இருக்க சொல்ல மாட்டியா.." "சும்மா சும்மா...எத்தனை தடவைதான் சொல்றது...கேட்கணுமில்லையா..." "உன் தங்கை ஒருத்தி சும்மா இருந்தாளே... அவள் எப்படி இருக்கிறாள்.." "அவள் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன். கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போகிறேன் என்றாள். வீட்டில் சும்மாவே இருப்பதற்கு ஏதாவது சும்மா படிச்சுட்டு வரட்டுமே என்று அனுப்பி வைத்தேன்." "சும்மா இருப்பதற்கு அது தேவலதான்.. அப்படியானால் உனக்கு சும்ம...

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே  பிள்ளை வெளியில் செல்கிறான். போகும்போது பார்த்து பத்திரமாக வா என்று சொல்லி அனுப்பும் தாய்மாரைப் பார்த்திருக்கிறோம். வரும்வரை வாசலிலேயே நின்று அலை மோதும் மனைவியைப் பார்த்து  "அவன் என்ன சின்ன புள்ளையா? வருவான் ... வருவான்  வந்து எனக்குச் சாப்பாடு போடு "என்பார் கணவர். எதுவும் காதில் விழாது. தூரத்தில் மகனைப் பார்த்ததும் தான் ஒரு நிம்மதி பெருமூச்சு வரும். இப்படிப் பார்த்துப் பார்த்து  பிள்ளைகளை வளர்க்கும் காலம். கேட்டால் ஒற்றைப் பிள்ளையை வைத்திருக்கிறேன். கருவேப்பிலைக் கண்ணாக வளர்க்கிறேன் என்று  நாம் மட்டும் தான் ஒற்றைப் பிள்ளையை வைத்திருப்பது போல ஏதோ நமக்குச் சரியெனப் பட்டதைப் பேசுவோம். அப்படி என்றால் முன்பு எல்லாம் இப்படி இல்லையா? வெளியில் சென்ற பிள்ளையை வந்தால் வா... வராவிட்டால் போ என்று அப்படியே விட்டுவிடுவார்களா? அதெப்படி? பெற்ற பிள்ளை மீது அன்பு இருக்காதா என்ன? அப்படியானால்... அப்படியானால்...ஏன் இவள் இப்படிச் செய்தாள்? யாரவள்...யாரவள்? கெடுக சிந்தை கடிதிவள் துணிவே  என்று புலவர் ஒருவர்  கோபப்படும் அளவுக்கு அப்படி என்ன செய்த...

அவ்வை என்று எழுதுவது சரியா

அவ்வை என்று  எழுதுவது சரியா ஔவை என்பதை அவ்வை என்று எழுதுகின்றனர். மையம் என்பதை மய்யம் என்று  எழுதுகின்றனர். இதெல்லாம் சரிதானா? இப்படியொரு கேள்வி நம் அனைவர் மனதிலும் எழுவதுண்டு. இருந்தாலும் யாரிடம் போய்க் கேட்பது? சரி எப்படியாவது எழுதிவிட்டுப் போகட்டும் என்று கடந்து  சென்று விடுவோம். ஆனாலும் அவ்வப்போது  அந்தக் கேள்வி வந்து தட்டி எழுப்பத்தான் செய்கிறது. பிழையான ஒரு சொல்லைப் பேரறிஞர்கள் கையாளுவார்களா? இருக்காது ஒருபோதும் பேரறிஞர்கள் எழுத்தில் பிழை இருக்காது என்று மனம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும். அவ்வாறு எழுதுவது பிழையன்று என்று நினைக்கிறோமல்லவா? நாம் நினைத்தால் அது பிழை இல்லாமல்  இருக்குமா?அதற்கு ஆதாரம் வேண்டாமா? வேண்டும் . ஆதாரம் வேண்டும். இதோ தொல்காப்பியம் தொல்காப்பியம் கூறுவது என்ன? என்று பார்ப்போம். " அகர உகர மௌகார மாகும் " அதாவது அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம்போல  இசைக்கும் என்பது இதன் பொருள். ஔவை- அவ்வை " அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ் சினை மெய்பெறத் தோன்றும்" மையம்-  மய்யம் எனவே  ஔவை என்பதை அவ்வை என்றும் மையம் என்பதை ம...

பவளவிழா வாழ்த்து

Image
பவளவிழா வாழ்த்து  பொங்கு புனல் பொருநை நதிநடக்க  அங்கம் தகதகக்க அருமருந்துநீர் மணக்க  நெல்லை இராமையாபிள்ளை கோமதி  இணை மடிசுமக்க மெல்ல சிரித்தாள் செந்தாமரையாள்  ஞானம்  முகம் சிவக்க! கண்டேன் சீதையை என மன்னன்  செல்லப்பா நெகிழ்ந்திருக்க மங்கை நல்லாள்  நாணிமுகம்  கோணி நிற்க இல்லறத்தில் இணைந்திருக்க இருவரும் விழைந்திருக்க இனிதாய் வளைகரம் பற்றினார்  மணம் முடிக்க! இல்லற சாட்சி  முன்னுரை எழுதி வைக்க நன்மக்கள் நால்வர் பிறந்தார் புதுக்கவிதை  வரைந்து வைக்க நல்லதோர் கூட்டாட்சி  இல்லத்தில் கூடியிருக்க நல்லாட்சி செய்தார் பிள்ளைகள் நனி சிறக்க! ஆசிரியர் பணிக்காய் முல்லுண்டில் கால் பதிக்க தொடர் ஓட்டம் பவாய் மாதுங்கா பேண்டி பஜாரெனப் பயணிக்க தலைமையாய் மகுடம் சூட்டி முல்லுண்ட் அணியம் சேர்க்க பணி நிறைவு செய்தார் நற்பெயர் நாளும்  நிலைக்க!  இவரின்.... குன்றா மொழிப் புலமை கண்டு   நான் மலைக்க மண்டும் மதிகண்டு வான்மதியை கார்மேகம் தான் மறைக்க பார்த்தேன் பாத்தேன்  படித்தேன்  என  உள்ளம் குதுகலிக்க படி தேன்உண்டு ...

தாசி பொன்னிக்கு...

தாசி பொன்னிக்கு..... தாசி பொன்னிக்கு....இப்படியொரு கடிதமா? எழுதியது யார்? கடிதத்தில் என்ன எழுதியிருக்கும்? காதல் கடிதமாகத்தான் இருக்கும். படித்துவிட ஆசை. ஆனாலும் உடனடியாகப் படித்துவிட முடியுமா? அக்கம்பக்கம் யாராவது பார்த்துவிட்டால் தப்பாக நினைக்க மாட்டார்களா...  சற்று தயக்கம். பொதுவெளியில் வெளியிடப்பட்ட  கடிதத்தைப் படிப்பதற்கு என்ன தயக்கம்? ஏன் அச்சப்பட வேண்டும்? இப்படி  மனதைத் தேற்றிக்கொண்டு கடிதத்தின் அடுத்தப் சொல்லைப் படித்தால்.. என்ன இது....இப்படி  சற்றும் கூச்சமில்லாமல் எழுதியிருக்கிறார். மன்னனும் நீயோ? வளநாடும் நின்னதோ? இப்படித் துணிச்சலாக சொல்லி விட்டுச் சென்றவரா இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.? என்ன.... நாடாளும் மன்னனைப் பார்த்து இப்படியொரு கேள்வியா? என்ன துணிச்சல்? இப்படிக் கேட்டது யார்? யாருக்கு இப்படிக் கேட்கத் துணிச்சல் வந்தது? அறிய வேண்டும் போல இருக்கிறதல்லவா? அறிந்து கொள்வோம் வாருங்கள். புலவர்கள்  தன்மானம் மிக்கவர்கள்.  தங்கள் தன்மானத்திற்கு இழுக்கு  ஏற்படும்  இடத்தில் அவர்கள் தங்குவதில்லை. தங்களை இகழ்பவர்களைப் புகழ்ந்து பாடுவ...

சரியான போட்டி

சரியான போட்டி  இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும் நீயா? நானா? என்ற போட்டி இருக்கும். படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம் இதற்குக் கிடையாது. படித்தவர்கள் தானே பண்பாக  நடந்து கொள்வார்கள் என்று எல்லோரையும் நினைத்துவிட முடியாது. அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் நாம் ஏமாந்து தான் போவோம். பதவிக்காகப் போட்டி. புகழுக்காகப் போட்டி. முதல் மரியாதைக்கான போட்டி. உரிமைக்கான போட்டி.  முதல் பரிசுக்கான  போட்டி. எங்கும் போட்டி. எதிலும் போட்டி. இவை எல்லாம் எதற்காக? தான்தான் எல்லாம்.... நான் நானே.....நான் மட்டும்தான் என்று தன் இருப்பை முன்னிலைப்படுத்த உலகம் தன்னை மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நான்...எனக்கு  என்ற சுயநலம் அன்றி வேறென்ன  சொல்வது?   போட்டி பொறாமையாக மாறும்போது சில விபரீதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அப்படி எல்லா இடங்களிலும் விபரீதம் மட்டுமே நடைபெறும் என்று  சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் அவர்களுக்குள் நடக்கும் போட்டி  காண்பவர் கண்களுக்கு  நல்ல விருந்தாக அமைவது உண்டு. கண்களுக்கு மட்டுமல்ல .உங்கள் செவிக்கும் இலக்கிய பசிக்கும் நல்ல விருந்தா...