Posts

Showing posts with the label பாரதியார் கவிதை

ஓடிவிளையாடுப் பாப்பா

Image
              ஓடி விளையாடு பாப்பா நமக்குத் தொழில் கவிதை  நாட்டிற்கு உழைத்தல்  இமைப்பொழுதும் சோராதிருத்தல்"  என கவிதையையே தொழிலாகக் கொண்டவன் பாரதி. பாரதி என்றதுமே கூடவே ஓடிவந்து அடையாளம்  காட்டி நிற்கும்  பாடல்களுள் ஒன்று ஓடி விளையாடு பாப்பா. "     பாரதி வெறும் கவிஞன் மட்டுமல்ல. அவனுடையப் பாடல்களில் நம்மைத்  தட்டி எழுப்பும் ஒரு மந்திர சக்தி இருக்கும். இயற்கைமீது கொண்ட காதல் இருக்கும். பெண்ணியச் சிந்தனை இல்லாமல் இருக்காது. சாதி எதிர்ப்பு கருத்துகள் இருக்கும். மனிதநேயப் பண்பு கொட்டிக் கிடக்கும். சமுதாயம் முன்னேற்றம் காண வேண்டும் என்ற வேட்கை  இருக்கும். பண்பாட்டைப் பேண வேண்டும் என்ற தாகம் இருக்கும். " தேடிச்சோறு நிதந் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ " என மார்தட்டியவர் பாரதி. இலக்கண வரம்பை தகர்த்தெறிந்து பாட்டுக்கொரு...