அச்சம் தவிர்
அச்சம் தவிர் " அறம் செய்ய விரும்பு " என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார் ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை " அச்சம் தவிர் "என்று தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார். முதல் வரி மட்டும்தான் தன்னம்பிக்கை கொடுக்கிறதா? இரண்டாம் வரியைப் பாருங்கள். " ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! இதுவும் நம்பிக்கை தரும் வரி இல்லையா? அதைத் தொடர்ந்து மூன்றாவதாக என்ன சொல்லியிருக்கிறார் என்றால்... " இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாதாம்..அது இகழ்வடைவதற்குக் காரணமாக அமைந்துவிடுமாம். எப்படித் தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். பாரதியின் பாடல்களில் எல்லாம் ஒரு எழுப்புதல் இருக்கும். இந்த ஒரு துள்ளல் உணர்வு இருப்பதுதான் பாரதியின் பாடல்களில் நாம் கட்டுண்டு கிடப்பதற்கான மந்திரம் என்று நினைக்கிறேன். பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும் உயிரோட்டமான உணர்வும் உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துண...