வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாறுதலைச் சந்தித்து இன்றைய எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளது. எழுத்து அப்படியே இருந்தால் என்ன? அதனை மாறுதலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதனால் என்ன பயன் நடந்துவிடப் போகிறது ? என்று கேட்பவர்களும் உண்டு. ஒரு எழுத்துக்கும் இன்னொரு சொல்லுக்குமிடையே உள்ள வேறுபாடு எளிதில் புலப்படாமை காரணமாக பொருள் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்ப்பதற்காகவும் எழுத்து எளிமையாக இருந்தால்தான் அனைவரும் எளிதாக படிக்க முடியும் என்ற கருத்திற்காகவும் இத்தகைய மாற்றங்கள் தமிழ் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தனவா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம் அனைவராலும் அறியப்படாமலேயே இருந்திருக்கிறது. வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம் செய...