காதோடு ஒரு கதை
காதோடு ஒரு கதை ஒரு மன்னருக்கு காட்டிற்குச் சென்று காட்டு விலங்குகளின் நலம் கண்டு வர ஆசை. " நாட்டு நடப்பு தெரிந்து நல்லாட்சி செய்கிறேன். ஒருநாள் என் ஆட்சிக்கு உட்பட்ட விலங்குகள் எல்லாம் எப்படி வாழ்கின்றன என்பதை காட்டிற்குள் சென்று அறிந்து வர வேண்டும் . புறப்படுங்கள் "என்று அமைச்சருக்குக் கட்டளையிட்டார். மறுநாள் அதிகாலை... வீரர்கள் புடைசூழ காட்டிற்குப் புறப்பட்டார் மன்னர். "அமைச்சரே! என்ன ஒரு விலங்குகளையும் காணவில்லை." "அதிகாலை அல்லவா...சற்று பொறுங்கள்..." நெடுநேரமாகியும் எந்த விலங்கும் வரவில்லை. "அமைச்சரே.. என்ன விசித்திரமாக இருக்கிறது. எனது காட்டில் விலங்குகளேஇல்லையா...." " அப்படி இல்லை மன்னா...வேட்டைக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என அஞ்சி விலங்குகள் வெளியில் வரவில்லை போல் தெரிகிறது" "அதற்கு ...